பண முதலைகள் பேசாலைதாஸ்
அன்பர்களே பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், பிண த்தை கட்டி அழும் போதும், பண ப்பெட்டி மீது கண்வையடா என் பார்கள் பலர், அதைவிட காசு கடவுளின் தம்பி என்பார்கள். பணத்த நாம் நாம் ஆளும் ஆளு மை நமக்கு வேண்டும், இல்லை யேல் நம்மை ஆளும் நிலை வந்துவிடும், அப்படி வந்துவிட்டால், கணவன், மனைவி, பெற்ற பிள்ளைகள் போன்ற பாசத்தையே இந்த பண ஆசை சாகடித்துவிடும், அந்த எண்ணக்கருவை விசால மாக்குகின்றது, இந்த வேடிக்கை துணுக்கு!
ஒரு கோடீஸ்வ ரன் ஒரு முதலைப் பண் ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டா ள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலை கள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகை த்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந் தனர்.அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக் கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பேசிய படியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான். வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். " இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட் டியே. நான் செத்திருந்தா?" மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்". அன்பர்களே இந்த வேடிக்கை துணுக்கிற்குள்ளும் இன்னொரு நீதி புதைந்து கிடக்கின்றது. அது இதுதான், ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள். அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக