பின் தொடர்பவர்கள்

புதன், 28 அக்டோபர், 2020

0012 காலங்களில் அவள் வசந்தம்

 காலங்களில் அவள் வசந்தம்!        பேசாலைதாஸ்

                                         

சுடரொளி அதுதான் அவளின் பெயர், ஆனால் சுடர், சுடர் என்று பள்ளித் தோழிகள் அன்போடு அழைத்ததால் அதுவே அவளது வழமையான பெயராகி விட்டது. பெயர் மட்டுமல்ல சுடொ ரொளி, அவள் அழகே பெரும் சுடொரொளி தான்! கிரேக்கம் மற்றும் ரோமானிய இதிகாச கதைகளில், வசந்தகால தெய்வ மாகவும், பாதாள உலக ராணியாகவும், மறுமலர்ச்சி யின் தேவதையாகவும் வர்ணிக்கப்படும்,  பிராஸர்பீனா(Proserpine) என்ற பேரழகு மங்கை யை போல,  சுடர் அந்த ஊரெல்லாம் பவணி வந்தாள். ஆமாம் சர்பீனா என்று அவளை நான் என் மனதுக்குள்ளே ஓதிக்கொள்வேன். பிராஸர்பீனா என்ற கிரேக்க பெயரைத் தான், நான் சர்பீனா என சுருக்கிக்கொண்டேன்.

                                           கண்கவர் பேரழகியாக என் சர்பீனா, அதுதான் சுடரொளி, அவள் பேரழகி யாக இருந்தாளும், அவளுக்கு, தான் பேரழகி என்ற கர்வம், கொஞ்சம் கூட கிடையாது, பணக்கார வீட்டுபிள்ளைகள், சாம்மாட்டியார் பிள்ளைகள், வாத்தியார் வீட்டு பெண்பிள்ளைகள், அழகற்றவர்களாக இருந்தாலும், ஆடை அலங்காரத்தால் தம்மைத்தாமே அலங்கரித்து, காகம் அன்னநடை  நடக்கப்போய், தன்நடையும் கெடுத்துக்கொணடது போல ,   ஏதோ ஒரு பக்கமாக, தங்கள் பின்புறத்தை அசைத்தாட்டிக்கொண்டு, செருக் கோடு செல்லும் சிருங்காரங்களுக்கு மத்தியில், சுடர் சுடர் தான்! அவள் சுண்டு விரல் அழகுக்கே எந்த அழகியும் சமம் இல்லை.

                                          எனக்கும் அவள் மீது கொள்ளை ஆசை, ஆனாலும் என் ஆவலை, என் உள்ளக்கிடைக்களை, எனக்குள்ளே அடக்கி வாசித்தேன், ஒரு பக்கத்தாளம் போல, சுடர் தன் தோழிகளுடன், மாந்தோப்பு, நல்லதண்ணி கிணறு இப்படியே அந்த கிராமம் முழுவது சுற்றித்திரிந்தாள், ஒரு அழகு வண்ணத்தேர்போல, அந்த சுடரொளி தேவதை யாருக்கு மயங்கப்போகி ன்றாளோ? என்று கிராமத்து இளவட்டங்கள் ஏங்கி நின்றபோது தான், அந்த சம்பவம் நடந்தது, பிராஸர்பீனா என்ற கிரேக்கத்து அழகு தேவதைக்கு நடந்தது போல அவளுக்கும் அது நடந்தது.

                                           

அதற்கு முன், பிராஸர்பீனா கதையில் வரும் அந்த சம்பவம் இதுதான். கிரேக்கத்தின் காதல் தேவதை வீனஸ் ( Venus புதன்) அவள், பிராஸர்பீனா என்ற அழகுதேவதையின் அழகு மிது, பொறாமையும், எரிச்சலும் கொண்டாள், அவளை பழிவாங்க,  பாதாள உலகத்தின் கடவுளான புளுட்டோ மீது, காதல் இறைவியான புதன்(Venus) தன் மகன் குபிட்( Cubid அவர்தான், நம்ம மன்மதன்) அனுப்பி காதல் அம்பினை புளுட்டோ மீது எய்யச்சொல்கின்றாள். பிராஸர்பினா, சிசிலி என்ற இடத்தில் தன் தோழிகளோடு ஆனந்தமாக பூப் பறித்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் எட்னா எரிமலையிலிருந்து தனது நான்கு கருப்பு நிற குதிரைகளோடு வெளியே வந்தார் புளூட்டோ.

                                          மோக கணையால் எய்யப்பட்ட அவர், அழகான பாவை போன்ற பிரஸர்பீனாவை  கண்டதும் விரைந்து அவளை அபகரித்து தன்னை திருமணம் செய்துக் கொண்டு பாதாள உலகில் வாழுமாறு வற்புறுத்தினர். பாவை பிராஸர்பினா எவ்வளவு மறுத்தும் அவளை கட்டாய படுத்தி பாதாள உலகிற்கு தூக்கி சென்றார் பூளுட்டோ. கிரேக்க கதையில் வரும் சம்பவம் போல, சுடரையும், ரெலோ என்ற ஆயுத கும்பலின், ஒரு தளபதி கடத்தி சென்றுவிட்டான்.

                                         சுடரொளி கடத்தப்பட்டது யாரால், எங்கே இருக்கின்றாள், என்று யாருக்கும் விபரம் தெரியாது, சுடர் இல்லாத அந்த கிராமமே மயனமா கியது, அங்குள்ள இளம் பெண்களுக்கெல்லாம், ஏதோ ஒரு அச்சம் மனங்களில் கவ்விக்கொண்டது,  சுடரின் தாய், தன் மகளை தேடி, காடு வனாந்தரம் எல்லாம் தேடி அலைந்தாள், காணாமல் போன தன் பிள்ளைகளை எண்ணி, இன்றுவரை ஏங்கித்தவிக்கும் அம்மாக்கள் போல அவளும் இருந்தாள் அன்று, அவளின் துயரைகண்டு இயற்கையே விரக்தியுற்றது.

                                       

பிரஸ்பீனாவுக்கு நடந்தவற்றை அறியாத, அவள் தாய் சீரிஸ், பூமியின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடுகிறாள். பாதாள உலகத்தில் தன் மகள் கதறும் ஒலியை அவளால் கேட்க முடிய வில்லை. அங்கு பிராஸர்பினா அவள் அனுமதியை மீறி கற்பழிக்கப்பட் டாள். எங்கு தேடியும் மகளைக் காணவில்லை,  விரக்தியடைந்த பூமாதேவி கோபமடைந்து சாபமிட்டதால் சிசிலியில் காய்கறிகளும் பழங்களும் வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டன. அவள் மீண்டும் ஒலிம்பஸ் மலைக்கு(Mount Olympus) செல்ல மறுத்து புவியெங்கும் நடக்க துவங்கினாள், அவள் பாதம் பட்ட இடமெல்லாம் பாலைவனமாக மாறி கொண்டே வந்தன.
                                         கிரேக்க கதையில் வருவதைப்போலவே, சுடரின் வாழ்விலும் நடந்தது. ரெலோ இயக்கத்தால் கடத்தப்பட்ட சுடர், அவளின் விருப்பத்துக்கு மாறாக, கடத்தி சென்ற இயக்க தளபதிக்கு, மணைவியாகி ஒரு குழந்தைக்கு தாயுமாகிவிட்டாள். இயக்கத்தின் முகாமில் அடைபட்டு கிடந்த சுடர் பலவித போராட்டங்கள் சிலரின் கோரிக்கையால், தன் தாயரை சந்திக்க அனுமதிக்கப்பட்டாள்.

                                         பிரஸபீனாவின் தாயான பூமிக்கடவுள் சீரிஸ்(Ceres)  தன் மகளின் பிரிவினால் சோகம் அடைவதினால் மரங்கள் பசுமை இழந்து, இலைகள் சொரிந்து கடுங்குளிரினால் உலகம் வாடத்தொடங்கியது, நடப்பதை கண்டு வருத்தமடைந்த வியாழன்(Jupiter) இதற்கெல்லாம் காரணமான தன் தம்பி புளூட்டோவின் அடாத்தான செயல்களை  நிறுத்த சொல்லி போராடினான்..வியாழபகவான் தன் தாய் மெர்குரி(Mercury) எனப்படும் வெள்ளியை அழைத்து புளூட்டோவை நிறுத்துமாறு சொன்னார். நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்க ஏற்பாடு செய்தான்.

                                                    நிலைமையை புரிந்து கொண்ட புளுட்டோ அவளை விடுவிக்கும்



முன் ஒரு திட்டம் செய்தான். பிராஸர்பினாவை நெருங்கி ஆறு மாதுளை பழங்களை அளித் தான், அவளும் சாப்பிட்டாள். பாதாள உலகம் மரணித்தவர்களின் உலகம்.அதை சேர்ந்தவ ற்றை உட்கொண்டால் புவியின் பரப்பில் வாழ முடியாது.இதனால் அவள் ஆறு மாதம் பாதாள உலகில் வாழ வேண்டியது அவசியம் ஏற்ப ட்டது.
                                          கிரேக்க கதயில் வருவதைப் போலவே, இயக்க சக போராளிகளின் ஹர்த் தால், மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தாய் மார்களின் போராட்டம், சமூக ஆர்வலர்களின் கண்டன கூக்குரல்கள், சமூக ஊடகங்களின் அழுத்தம் காரனமாக, பலவந்தமாக தன் மனைவியாக்கப்பட்ட சுடரை ஆறு மாதம் அவள் தன் தாயோடும், ஆறு மாதம் தன்னோடு வாழவேண்டும் என்ற ஒப்பந்த்த அடிப்படையில் சுடர் விடுவிக்கப்பட்டாள். சுடர் தன் தாயோடு வாழும் அந்த காலம் அவளுக்கு வசந்த காலமாக மாறியது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

                                                  பாதாள உலகிலிருந்து வெளியே வந்த பிராஸர்பினாவை பூமித்தாய் சீரிஸ் கண்டதும் அந்த தேசம் எங்கும் பூத்துக் குலுங்க ஆரம்பித்தது, மரங்களில் பச்சை இலைகள் செழிக்க துவங்கின,வயல்களில் தானியங்கள் வளம் பெற்றது. வசந்த கால காற்று அந்த நிலமெங்கும் வீசியது.இந்த நிகழ்விலிருந்து பிராஸர்பினா நிலத்தில் வாழும் ஆறு மாதங்களின் தொடக்கத்தில் வசந்த காலமும் தொடங்கும், இதனை புராண ரோமனியர்கள் விழாவாக கொண்டாடினர்.

                                                       யாவும் உண்மை கலந்த கற்பனையே!

                                                                                                       பேசாலைதாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...