பின் தொடர்பவர்கள்

புதன், 20 நவம்பர், 2019

0045 விபச்சாரி

ஒரு விபச்சாரியை சந்திக்கத்துடிக்கின்றேன் ,,,,,,, பேசாலைதாஸ்

                இயேசு கல்லால் அடித்துக்கொல்ல துர த்திய ஒரு விபச்சா ரியை காப்பாற்றி தன் சீடராக்கினார், அது போல புத்தருக்கும் நட ந்தது, கௌதம புத்தர், ஞானம் அடைந்த மாம னிதர். தனக்குள் நிகழந்த அந்த புனித ஞான த்தை ஒவ்வொரு ஊர் ஊராக சென்று ஞான தாக த்தில் இருப்பவர்களுக்கு புத்தர் ஞானம் வழங்கு வது வழக்கம். 

                                     இப்படி லும்பினி என்ற ஊர் அரு கில் உள்ள ஒரு வீட்டில் அவர் திடீரென உள்ளே நுழைந்தார். அது ஒரு விலைமாதுவின் குடில். பின் தொடர்ந்து வந்த சீடர்களுக்கு ஒன்றும் புரி யவில்லை. சீடர்களுக்குள் விவாதம் வந்து அரு கில் உள்ள ஆலயத்தில் தங்கிவிட்டு நாளை புத்தரை சந்திப்போம் என்று முடிவு செய்தனர்.

                                           மறுநாள் காலையில் புத்தர் ஓர் மரத்தடியில் அமர்ந்து இருந்தார் அவர் அரு கில் அந்த பெண்மணி மலர்களுடன் அமர்ந்து இருந்தாள். இதை கண்டு விரைந்து வந்த சீடர் கள் இந்த மாதுவிடம் அப்படி என்ன மாற்றம் வந்தது என்று கேட்டனர். அதற்கு புத்தர் புன்ன கையுடன் அவள் வெறுமை(ஞானம்) அடைந்து விட்டாள் என்று கூறினார். 

                                                      அனைவரும் அதிர்ந்து போனார்கள். நாங்கள் உங்களுடன் ஞானத்தை தேடியே பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ் ந்து வருகிறோம். இது வரை எங்களுக்கு இது நிக ழவில்லை. இது எப்படி அப்பெண்ணுக்கு ஒரே இரவில் சாத்தியம் ஆனது என்று புத்தரிடம் வினாவினார்கள். 

                                   மீண்டும் புத்தர் புன்னகையுடன், தாம் நல்லவர் என்று தனக்குள் எண்ணி வாழ்ப வன் பல சுமைகளை சுமந்து கொண்டு நீதி நெறி களை கடைபிடித்து வாழ்வார்கள். அவர்களுக்கு "நான்" என்ற அஹங்காரம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு ஞானம் எட்டாத தூரத்தில் இருக் கும். ஆனால் கெட்டவர்கள் என்று தமக்குள் எண் ணி வாழ்பவர்கள். தங்களுக்குள் ஒரே ஒரு சுமை யை மட்டும் சுமக்கிறார்கள். அதுவும் தான் கெட் டவர் என்ற சுமை மட்டுமே. மற்றும் அவர்களிடம் "நான்" என்ற அஹங்காரம் முற்றிலும் குறைவு. ஆனால் இவர்கள் சிறிது விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஒரே ஒரு நொடிபொழுதில் அவளு க்குள் அந்த அற்புதத்தை (ஞானத்தை) நிகழ செய்தேன். 

                               அவள் உயிர் தூய்மை அடைந்தது. மீண்டும் பிறந்தாள் அடுத்த நொடியில். அவள் கையில் ஒரு மலரை தந்துவிட்டு இனி உன் உயிர் உள்ளவரை உலகம் முழுவதும் சென்று அறியா மையில் இருப்பவர்களுக்கு ஞானம் வழங்கு என்று புத்தர் சொல்லிவிட்டு அவர் சீடர்களுடன் விடைப்பெற்றார் அவ்விடத்தில் இருந்து. 
       
                                    அந்த புனித பெண் தமக்குள்ளே நடந்த அந்த அற்புதத்தை அனைவரும் அடைய வேண்டும் என்ற தீவிரத்துடன் அனைத்து ஊர்க ளுக்கும் யாத்திரை சென்றாள். ஞானத்தை தேடி எங்கும் அலைய தேவையில்லை. அந்த தாக த்தை மட்டும் உங்களுக்குள்ளே உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் எங்கு,எப்படி இருந்தா லும் குரு உங்களை தேடிவருவார் அந்த அற்புதத் தை நிச்சயம் உங்களுக்குள் நிகழ செய்வார். எனக்கும் அது நிகழ வேண்டும் என ஆசைப்படு கின்றேன் அதற்காக ஒரு விபச்சாரியை தேடுகின்றேன் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...