பூங்கதவே தாழ் திறவாய்! முகநூல் கதை பேசாலைதாஸ்
ரவி சாந்தா இருவரும் பள்ளித்தோழர்கள் நாளடைவில் தோழமை காதலாக மாற இருவரும் திருமணம் முடித்துக்கொண்டனர். கல்லயாணமான அன்று இருவரும் ஒரு ஒப்பன்தம் செய்துகொண்டணர், இரண்டு நாட்களுக்கு இன்பத்தை யாரும் இடையூறு செய்யவண்ணம் யார் வந்தாலும் கதவை திறக்ககூடாது என ஒப்ந்தம் செய்து ஜாலியாக இருன்தார்கள்.அடுத்த நாள் காலையில் ரவியின் அம்மா அப்பா வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்கள், ரவியினால திறக்காமல் இருக்க முடியவில்லை , ஆனாலும் அன்பு மனைவி யின் ஆசை ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு கதவை திறக்கவே இல்லை, அவர்களும் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.அதே நாள் மாலை சாந்தாவின் அம்மா அப்பா இருவரும் வந்து கதவை தட்டினார்கள், சாந்தாவினால் இருப்பு கொள்ளவில்லை கண்கள் குளமாயின, அழுகை அடக்கமுடியாமல் ஓடிவந்து கதவை திறந்தாள்! ரவியும் இன்றும் சொல்லவில்லை ஒப்பந்தம் அன்றே முறுந்துவிட்டது! வருடங்கள் ஐந்து உருண்டோடியது. ரவிக்கும் சாந்தாவுக்கும் முதல் இரண்டு ஆண்பிள் ளைகள் பிறந்தன, மூன்றாவதாக் ஒரு பெண் பிள்ளை பிறந்தது ரவி பெண்குழந்தையின் பிறந்த நாளை ஊரே அசந்துபோகுமளவுக்கு ஏற்பாடு செய்தான். இதை பார்த்த சாந்தா கேட்டாள் ஆண்பிள்ளைகள் இரண்டுக்கும் செய்யாத ஏற்பாடு ஏன் பெண்பிள்ளைக்கு மட்டும் விசேட கொண்டாட்டம் என்று கேட்டாள் அதற்கு ரவி சொன்னான், பெண் பிள்ளை என்ன னடந்தாலும் ஓடிவந்து கதவை திறப்பாள் இந்த அப்பாவுக்கு என்று தன் சேட் க்லரை தூக்கிவிட்டுக்கொண்டு சொன்னான், அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக