இறைவன் இப்படிப்பட்டவர் என்று யாருக்குத் தெரியும்? நான் சொல் கின்றேன் கடவுள் ஒரு பச்சோந்தி ஓணான் மாதிரி என்ன அதிர்ச சியாய் இருக்கா? நான் எழுதும் கதையை வாசித்தபின் சரியா பிழையா என சொல்லுங்கள்
- ஒருவன் ஒரு மரத்தில் அழகான பிராணி ஒன்றைக் கண்டான் அவன். அவன் திரும்பி வந்து மற்றொருவனிடம், தம்பி அந்த மரத்தில் நான் ஒரு சிவப்பு பிராணியைப் பார்த்தேன் என்றான். அதற்கு மற்றவன் நானும் பார்த்தேன். ஆனால் அது எப்படி சிவப்பாக இருக்க முடியும்? அது பச்சையாயிற்றே என்றான். இன்னொருவன் இல்லை, இல்லை அது எப்படி பச்சையாக இருக்கும்? அது கறுப்பு நிறமாயிற்றே என்றான். இப்படி தொடர்ந்து அவர்களுக்குள் சண்டையே மூண்டு விட்டது. கடைசியாக அவர்கள் அந்த மரத்தடிக்குச் சென்று பார்த்தார்கள் - அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரை இதுபற்றி கேட்டபோது அவர், நான் இந்த மரத்தடியில் இருப்பவன், எனக்கு அந்தப் பிராணியை நன்றாகத் தெரியும் நீங்கள் என்னென்ன சொன்னீர்களோ அவையெல்லாம் உண்மை. சில சமயம் சிவப்பு, சிலசமயம் பச்சை, சில சமையம் மஞ்சள், சில சமயம் நீலம் இப்படி எத்தனையோ நிறங்கள் அதற்கு உண்டு. அது மட்டுமல்ல, சில வேளைகளில் அது எந்த நிறமும் இல்லாததாகவும் காணப்படும் அது பச்சோந்தி என்று சொன்னார். - யார் எப்போதும் கடவுள் நினைப்பில் இருக்கிறார்களோ அவன்தான் அவர் என்ன உருவத்தை உடையவர் என்பதை அறிய முடியும். அவர் பல உருவங்களில் காட்சியளிக்கிறார். பல நிலைகளில் காட்சியளிப்பார்; அவர் குணங்கள் உடையவர், அதே வேளையில் குணங்கள் அற்றவர் என்பதை அவனே அறிவான். - பச்சோந்தி பல நிறம் கொண்டது. நிறம் அற்றதும் கூட என்பதை மரத்தடியில் இருப்பவனே அறிவான். மற்றவர்கள் வாதமும் சண்டையும் இட்டு துன்பத்தை அடைகின்றனர். - இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர் எப்படி தெரியுமா? எங்கும் நிறைந்த பரந்து விரிந்த உருவமற்ற கடல் போன்றவர் இறைவன்.ஆனால். பக்தியாகிய குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் கடல் நீர் பனிக்கட்டியாக மாறுகிறது. தண்ணீர்தான் பனிக்கட்டி உருவத்தில் உறைந்திருக்கிறது. அதாவது இறைவன் பக்தர்களுக்குச் சில வேளைகளில் உருவத்துடன் காட்சியளிக்கிறார். ஞான சூரியன் உதிக்கும்போது அந்தப் பனிக்கட்டி கரைந்து விடுகிறது.சில இடங்களில் பனிக்கட்டி உருகுவதே இல்லை..அதேபோல பக்தர்களுக்காக உருவக்கடவுளும் நிரந்தரமாக இருக்கிறார்.அன்பின் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக