பின் தொடர்பவர்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2019

0283 அதுவே வாழ்வின் அர்த்தம் !! பேசாலைதாஸ்

அதுவே வாழ்வின் அர்த்தம் !! பேசாலைதாஸ்


ஒரு பெரிய மைதானம்.*அங்கே மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் !*அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார்.* குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார்.*பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.*சாமியார் அவர்களைக் கேட்டார். *"கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்திலதான் விளையாடுவீங்களா?"*"ஆமா சாமி!""எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?"முதல் பையன் சொன்னான். *"நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித் தள்ளிடலாம்!"*இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. *"நீ பெரிய பயில்வானா வருவே"*என்று அவனை ஆசிர்வதித்தார்.அதன்பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். *"நீ ஏம்பா தினமும் விளையாடறே?"**"ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து படிச்சா எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!"**"பிரமாதம் ! நீ பெரிய படிப்பாளியா வருவே"* என்று இரண்டாவது பையனை ஆசிர்வதித்தார் !பிறகு *மூன்றாவது பையனையும்* அதே கேள்வியைக் கேட்டார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். *"எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடறேன்!"**சாமியார் அவனை வணங்கினார்.* *_"இனிமே நீதான் என்னோட குரு!"_*அன்பர்களே! வாழ்க்கையை காரண காரியத்துக்காக வாழாமல், மனதின் திருப்திக்காக, மனதின் விருப்புக்காக வாழ பழகிக்கொள்ளுங்கள்   ஒவ்வொன்றுக்கும் காரணம், பின்விளைவுகள், லாப நஷ்டங்கள் எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் ! அதுவே வாழ்வின் அர்த்தம் !! அன்பின் பேசாலைதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...