காதல் என்பது எதுவரை? பேசாலைதாஸ்
அன்பர்களே காதல் என்பது எதுவரை? என்ற சினிமா பாடல் இருக் கின்றது. அந்த பாடல் இப்படி தொடர் கின்றது. காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை, கல்யா ணம் என்பது எதுவரை? கழுத்தில் தாலி விழும் வரை. அப்படியென் றால் தாலி கட்டி, ஒரு பெண்ணை அடைந்துவிட்டால் காதல் முடிந்து விட்டது என்ற அர்த்தமா?
தமிழ் கலாச்சரத்தின் மிக பலவீனமான , எனக்கு பிடிக்காத அம்சம் இதுதான். ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு இது. ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் செயல் இது. ஒரு பெண்ணை வெறும் கேளிக்கை பொருளாக, காம இச்சை போக்கும் ஒரு போதைப் பொருளாக பென் பேதையை அணுகும் தற்காலிக காதல் கட்டாயம் மண முறிவில் வந்துமுடியும். கணவனோ, மனைவியோ அடுத்தவரை வெறும் கிளர்ச்சிப் பொரு ளாக மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக் கொண்டு இருந்தால், இந்தப் பிரச்சினை வரத்தான் செய்யும். உங்கள் மனைவியை வெறும் கேளிக்கைக்காக மட்டுமே சேர்த்துக்கொண்டு இருந்தீர்கள் என் றால், இந்த உறவில் இருந்து அவரை விடுவிப்பது அல்லது விவாகரத்து செய்வது, அவருக்கு நாம் செய்யும் பேருத வியாக இருக்கும்.
காதல் என்பது திருமணத்திற்கு முந்தின கட்டம் என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள். ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது அவளிடம் காட்டிய அதே நெருக்கமான, அர்ப்பணி ப்பான உணர்வை, மனைவியாக அவளை ஆக்கிக்கொண்டபின் காட்ட த்தேவை இல்லை என்று நீங்களாக முடிவு செய்துவிட்டீர்கள். இப்போது, உங்கள் காதலில் லயிப்பு இல்லை. ஏதோ கல்யாணம் செய்தோம் என்ற கடமை உணர்வு தான் இருக்கிறது. அதனால்தான், காதல் உலர்ந்து விட் டது. காதலித்த காலம் வேறு. திருமண வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் காலம் வேறு. நல்லதோ கெட்டதோ இருவரிடமும் சில மாற்றங்கள் நேர்ந் திருக்கும். அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளத் தவறியதால், இப்போது சலிப்பு, கட்டாயம் என்ற வார்த்தைகள் முளைத்துவிட்டன.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். காதல் தானாகச் சாகாது. நீங்கள் வலியக் கொன்றால்தான் அது உயிர்விடும். உடல்ரீதியாக அணுகாமல், உணர்வுரீதியாக அணுகி, முறையான பரா மரிப்பைக் காதலுக்கு அளித்துப் பாருங்கள். அது உயிர்ப்போடு மீண்டும் உங்களுக்குள் பூத்துக் குலுங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையைச் சிறு இன்பங்களுக்காகவோ, கேளிக்கைக்காகவோ வந்தவர் என்று பார்க்கா மல், உண்மை யான அன்புடன் உங்களின் ஒரு பகுதியாக நீங்கள் சேர்த்து க்கொண்டு இருந்தீர்கள் என்றால், குழப்பமே வந்திருக்காது. வாழ்க்கை யின் ஆழங்களுக்குச் செல்லாமல், மேலோட்டமாக நழுவிச் செல்லப் பார்க்கையில்தான், இது பூதாகாரமான பிரச்சினையாகத் தெரியும். உடல்ரீதியான ஈர்ப்பு, உணர்ச்சி களைத் தூண்டும் கிளர்ச்சி, இவற்றைத் தாண்டிப் பார்க்கவே ண்டியது காதல்! காதல், காமம், கவர்ச்சி, உடல் புணர்ச்சி இவை களுக்கூடாக வந்திருந்தாலும் உண்மையில் அது இவை களுக்கு அப்பால்பட்டது!
சுவீடன் தேசத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அங்கே சுரங்க வேலையில் ஈடுபட்டு இருந்த வர்கள் பூமி க்குள் புதைந்துகிடந்த ஓர் உடலைக் கண்டுபிடித்த னர். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு நேர்ந்த ஒரு நிலச்சரி வில் பூமிக்கு அடியில் சிக்கி க்கொண்ட இளைஞனுடைய உடல் அது. அங்கிருந்த குளிர்ந்த தன்மை காரணமாக அந்த உடல் அழுகிப்போகாமல், அதே இளமையுடன் இருந் தது. அடையாளம் காண்பதற்காக, அந்த உடல் பொதுமக்கள் பார்வை க்கு வைக்க ப்பட்டது. கூடிய மக்களில் 70 வயதுக் கிழவி ஒருத்தி இருந் தாள். தன் ஊன்றுகோல்களைப் போட்டுவிட்டு, அவள் அந்த இளைஞ னின் உடல்மீது விழுந்தாள். அணைத்துக்கொண்டு அழுதாள். இளமை மாறாமல் சிலையாகிப் போயிருந்த ஒருவனும், சுருக்க ங்கள் விழுந்த சருமத்துடன் இருந்த கிழவியும் அரவணைத்துக் கிடந்தது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. நிலச்சரிவில் சிக்கி மறைந்த தன் காதலனை 50 வருடங்களுக்குப் பின்பு பார்த்து, அவள் உணர்ச்சிவசப்பட்டு இருந்த நிலை, இதுவல்லவா உண்மையான அன்பு… இதுவல்லவா உண்மை யான காதல்
ஆம் அன்பர்களே வாழ்க்கை என்பது பல கட்டங்களைக் கொண்டது. குழந்தையாக இருந்தபோது எது உற்சாகம் தந்ததோ, அது இளமையில் தொடர்வது இல்லை. இளமையில் எது கிள ர்ச்சி தந்ததோ, அது அடுத்தகட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்துவது இல்லை. உங்கள் உறவில் அதே பழைய கிளர்ச்சியையும், பரபரப்பையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், வாழ்க்கையில் நீங்கள் பயணப்படாமல் தேங்கி நின்று விட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையின் வெவ்வேறு பரிமா ணங்களை அனுபவித்து உணர, ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு ஆனந்தமாக, நேர்த்தியாக, விருப்பத்துடன் பயணம் செய்யவேண்டும். அதில்தான் சந்தோஷத்தின் சூட்சுமம் இருக்கி றது. வாழ்க்கையை ரசிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் காதல் மிக முக்கியமானது. நான் சொல்ல வருவது மாற்றங்கள் ஆண் பெண் இருவருக்குள்ளும் நடந்தாகவேண்டும் இல்லையேல் அவரவர் பாதையில் பிரிந்து செல்வதே மேல் ,அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக