பின் தொடர்பவர்கள்

புதன், 4 ஜூலை, 2018

0560 அழிவின் ஆரம்பம்!

 அந்தஸ்து, ஆணவம் அழிவின் ஆரம்பம்! பேசாலைதாஸ்
                                அன்பர்களே நாம் படித்த படிப்பு, தேடிய செல்வம், அடைந்த பதவி இவற்றை ஓர் சமூக‌ அந்தஸ்து என்று நினைப்பதே முட்டாள் தனம். முதலில் அதை மாற்றி க்கொள்ளுவோம். நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்து டன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளை வாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறு ஒருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்துக்குப் பய ணமா னார்கள், அவ்வளவுதான். 

                                இதில் அந்தஸ்து எங்கே வந்தது? இப்போதும் உங்கள் நண்பர் கள், உறவினர்கள் வெவ்வேறு தனித்தனியான நோக்கங்களுடன் வெவ்வேறுவிதமாக வாழ் ந்து இன்றைய நிலை க்கு வந்திருக்கிறார்கள். அந்த வித்தியாசங் களை அப்படியே பார்க்கத் தெரியாமல், அந்தஸ்துடன் தொடர்புப்படுத்து வது என்பது ஒருவித அகங்காரம். அது தேவை இல்லை.  

                                           பணை மரம் கிளைகள் அற்ற மரம், ஆலமரம் விழுகள் கிளைகள் பல கொண்ட பெரும் விருட்ச்சம். ஆல மரம் பனை மரத்திடம் அந்தஸ்து பற்றி பேசமுடியுமா? இல்லை. அதிகமாக ஆலமரங்கள் பனை மரத்தை ஆதாரமாக கொண்டே வளர்ந்திருக்கின்றன. ஆனால் இரண்டு மரங்களும் ஒரே மட்டத்தில் இருக்க முடியுமா? கட்டாயமாக இருக்க முடி யாது. மனிதர்களும் அப்படித்தான். அவரவர் திறமைக்கான வளர்ச்சி யைக் கண்டிருக்கிறார்கள். இதில் யாரும் தாழ்ந்தவர் இல்லை. யாரும் உயர்ந்தவர் இல்லை. சரித்திரத்தில் இடம் பெற்ற உண்மை சம்பவம் ஒன்று.

                                                                       மாவீரன் அலக்ஸாண்டர் பல‌ சாம்ராஜ்ய ங்களைக் கைப்பற்றிய பின், வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் . பயணத்தின்போது, திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது. உயிர் பிழை ப்பதே அரிது என்ற நிலை. தன் தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மர ணம் அடைய ப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது. தன் தளபதிகளை அழைத்தான். ‘என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றி வையுங்கள் என்றான். 

                                                                    என் சவப்பெ ட்டியை என் மருத்துவர்கள் தான் சுமக்க வேண்டும். என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும், மணியும் நான் வெற்றிக்கொண்ட மற்ற நவ ரத்தினங்களும் தூவப்பட வேண்டும். என்னுடைய இரண்டு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும்’. தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் ‘மாமன்னா, இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன?’ 

                                                      அலெக்ஸாண்டர் சொன்னான், ‘வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கியப் பாடங்களை மக்களுக்குச் சொல்லிவி ட்டுப் போக விரும்புகி றேன். எப்பேர்ப்பட்ட மாமன்னனாக இருந்தாலும், மருத்துவர்க ளால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்கவேண்டும் என்றேன். ஒரு குன்றிமணிகூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவி க்கவே வழியெங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன். இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றும் அற்றவனாக வந்தேன். விட்டுப் போகு ம்போதும், ஒன்றும் அற்றவனாகப் போகிறேன் என்பதை, சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும்’ என்றான் அலெக்ஸாண்டர்.                                                                      

                                                           அன்பர்களே இதுதான் வாழ்க்கை! இதுதான் வாழ்வின் உண்மை. இதில் அந்தஸ்து என்பது ஏது? உங்களுடன் பள்ளி க்கூடத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு கட்டத்துக்குப்பின் நண்ப ர்களாகத் தொடர வாய்ப்பு இல்லாமல் வெவ்வேறு பாதைகளில் போயிரு க்கலாம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தஸ்து என்றா அன்றைக்குத் தோன்றியது? இல்லையே.  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...