பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 12 ஜூன், 2018

0551 அப்பாக்களின் அன்புக்கு பின்னால்,,,,,,?

அப்பாக்களின் அன்புக்கு பின்னால்,,,,,,?
Derek Redmond இவர் ஒரு பிரித்தானிய நானூறு மீட்டர் ஓட்டப்பந்தய வீரர். 1992 ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் விளையா ட்டு போட்டியில் கலந்து வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். ஓட்டப்போட்டி யின் இடைநடுவிலே அவரு க்கு கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இருந்தபோதும் அழுதுகொண்டு, தத்தி தத்தி ஓட்டத்தை முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். அப்பொ ழுது ஒருவர், பாதுகாவலர்களின் தடையையும் மீறி, மைதான த்தில் புகுந்து, டெரிக் ரெட்மன்டை அணைத்தபடியே, எல்லைக் கோட்டை தாண்டி விளையாட்டு போட்டியை நிறைவு செய்ய‌ உதவி செய்தார். மைதானத்தில் இருந்த அத்தனைபேரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அந்த மனிதர் வேறு யாருமல்ல டெரிக் ரெட்மன்டின் தந்தையாவார். பந்தயத்தில் ஜெயிப்பது என்பது வேறு, தன்னம்பிக்கையுடன் தோற்கும் நிலை வந்தாலும், ஆட்டத்தை இறுதிவரை முடிப்பதே உண்மையான வீரனுக்கு அழகு! அதனை நிறைவு செய்வதை பெருமையாக எண்ணினார் அந்த வீரனின் தந்தை. வாழ்வின் ஓட்டத்தை ஓடிமுடித்தேன், ஜீவ கிரீடம் எனக்காக காத்திருக்கி ன்றது என புனித பவுல் சொல்லுமாப்போல, நாம் ஒவ்வொரு வரும் வாழ்வின் ஓட்டத்தை நல்ல படியாக முடிக்கவேண்டும் என்பதே இறை சித்தமாக இருக்கின்றது. உங்களுக்காக அந்த நிகழ்வை கானொளியில் தருகின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

The Olympian who never gave up In 1992, the British athlete Derek Redmond was set for the race of his life in the 400m semi-final at the Barcelona Olympics. However, early in the race his dreams were shattered when he felt his hamstring go. Instead of stopping, he began to hobble around the rest of the track, determined to finish. Redmond's father was watching his son's agony from the stands. He fought his way past the officials and on to the track to help his son across the finish line. The image of father and son crossing the finishing line became a defining one for the 1992 Olympics.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...