மாற்றங்கள்
அன்பர்களே நம்மில் பலபேர் மாற்றி யோசி க்கவேண்டும். மாற்றுக்கருத்துக்கள் தேவை, உலகம் மாறவேண்டும் இப்படியாக கதை அளப்பார்கள். உண்மையில் மாற்றங்கள் முதலில் நம்பில் இருந்துதான் நிகழவே ண்டும் என்பதை இவர்கள் அறியாதிரு ப்பார்கள். இதனை மிக சுவாரஸ்யமாக சொல்லவருகின்றது இந்த கதை.ஒருத்தன் தன் மனைவி மேல் அதீத அன்பு வைத்திருந்தான் ஆனால் அவனுக்கு சிறு கவலை கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவரகேட்ககவில்லை! அவளுக்கே தெரியாமல் அவளது குறையை போக்க நினைத்தான்! ஒரு காது டாக்டரை அணுகி.... டாக்டர் சார்...என்மனைவிக்கு காது கேட்கவில்லை..எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும் ! என்றான்! டாக்டரும்..ஓகே...ஆனால்...உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும் சுத்தமா கேக்கலையா...? நூறு அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...?பத்து அடி தூரத்திலி ருந்தா....இப்படி....? அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்... அவனும்.... சரி என்று வீட்டுக்கு போனான்....அவன் மனைவி..சமையல் கட்டில் ஏதோ சமையல் செய்து கொண்டிருந்தாள்....இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தன் சோதனையை ஆரம்பித்தான்... ஹே...ய்.... நிலா...இன்னைக்கு என்ன சாப்பாடு காலையில.....என்று சத்தமாக கேட்டான். பதில் இல்லை.... சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போ ம்ணு... நெனைச்சிக்கிட்டு...கிச்சனுக்கு வெளியில நின்னுக்கிட்டு... அடியேய் நிலா...இன்னைக்கு என்ன காலை சாப்பிடுவதற்கு.....? அப்பவும் நிலாவிடம் இருந்து...பதில் இல்லை..என்னடா இதுன்னு நெனைச்சுக்கி ட்டு...மனைவி பக்கத்துல போய்...நேருக்கு நேர் நின்று....ஏன் டார்லிங்.. நிலா. நான் கேட்டது உன் காதுல விழலையா...இன்னைக்கு என்ன சாப்பாடு காலையில செல்லம்...னு...? கேட்டு முடிக்கும் முன்பு....அவன் கன்னத்தில் பளார்னு...ஒரு அறை விழுந்தது...யோவ்....காது மந்தமா போனவனே....நீ மொதோவாட்டி கேட்டபோதே.....இன்னைக்கு. உப்புமா.....உப்புமா...னு...நாயா..கத்தறேன்...உன்காதுல..விழாம....ஏன்யா ஏன் உயிர எடுக்குற..ன்னு....😜😝😜😝😜 இது போலத்தான் நம்மில் பலபேர் தனது குறையை உணராமல்! பிறரின் மேல் குறை உள்ளதாக எண்ணி! அவர்களை மாற்ற முயல்கிறார்கள். மிகுதி உங்கள் சிந்தனைக்கு அன்பின் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக