பின் தொடர்பவர்கள்

வியாழன், 29 மார்ச், 2018

0514 குதர்க்கவாதிகளா? குழப்பவாதிகளா?

 குதர்க்கவாதிகளா? குழப்பவாதிகளா?
அன்பர்களே நம்மில் பலபேருக்கு தங்களை அறியாமல் சில மனோ வியாதிகளைக் கொண்டுள் ளார்கள். அதாவது தான் சொல் வதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற ஓர் மனவேட்கை அல்லது குழப்பமாக எடக்குமுட க்காக எதையாவது சம்பந்தமி ல்லாமல் கதைப்பார்கள், இப்படி பேசுபவர்களின் உள்நோக்கம் மற்றவர்களை விட தான் அறிவாளி என்பதை காட்டுவதற்காக நம்மில் பலபேர் நடந்து கொள்வதை நீங்கள் உங்கள் அனுபவரீயாக சந்தித்திருப்பீர்கள் அதை இன்னும் சிறப்பாக விளக்குவதற்கு இந்த கதை மிகப்பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
                                        அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான் . அவனை எல்லோரும் முட்டாள் என்றே அழைத்து ஏளனம் செய்து வந்தனர். அவன் ஒரு நாள் ஒரு பிரபல துறவியை கண்டான் . அவன் துறவியிடம் சென்று"ஐயா என்னை எல்லோரும் முட்டாள் என்றே கூறுகின்றனர் நான் எப்படி அறிவாளியாவது "என்று கேட்டான்.
அதற்கு துறவி ஒரு ரகசிய ஆலோசனை வழங்கினார். அதன்படி காலை எழுந்தவுடன் அந்த இளைஞன்  மக்கள் கூடும் கடைவீதிக்கு சென்றான்..அங்கே  ஒரு நண்பன் மயில் தோகை விரிக்கிறது மழை வரும் என்றான். அதற்கு இளைஞன் மழை வருவதால் தான் மயில்தோகை விறிக்கிறது என்றான். இன்னொரு நண்பன்  கோயிலுக்கு சென்றால் கடவுளை பார்க்கலாம் என்றான் .அதற்கு இளைஞன் கஷ்டமான நேரத்திற்கு உதவுபவர்கள் தான் கடவுள் என்றான். அங்கே ஒரு பெரியவர் அந்த நதி அழகு என்றார். அதற்கு இளைஞன் நதி அழகல்ல அதில் ஓடும் தண்ணீர் தான் அழகு என்றான்..
யார் சொல்வதையும் ஏற்றுகொள்ளாமல் தர்கம் செய்து கொண்டிருந்தான். மக்கள் குழம்பிபோனார்கள். என்ன ஆச்சு திடீரென இப்படி ஆயிட்டானே என பேசிக்கொண்டனர். இளைஞன் வீட்டிற்கு சென்றான் அங்கே அவன் அம்மா  ஒரு அழகிய பெண்ணை காட்டி" டேய் இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோடா" என்றார். அதற்கு இளைஞன் ‘’இந்த பெண் அவலட்சனமாக இருக்கிறாள் எனக்கு இவள் வேண்டாம்’’ என்றான். மறு நாள் காலை அவன் வழக்கம்போல் கடைவீதிக்கு சென்றான். மக்கள் எல்லோரும் அவனை அறிவாளி  என மரியாதையோடு நடத்தினர். அவன் சொல்வ திலும் அர்த்தம் இருக்கிறது என்றனர். துறவி சொன்ன ஆலோசனை இது தான். "நீ யார் எது சொன்னாலும் எதிர்த்து பேசு, மறுதலித்து பேசு. எதிர்மறையாக பேசு. எதையும் ஏற்றுகொள்ளாதே. அவர்கள் சொல்வதிலுள்ள குறைகளை கண்டுபிடி. வாதம் செய்" என்பது தான். இப்போதுள்ள நிறைய பேர் இந்த போர்வையில் தான் வாழ்ந்து வருகின்றனர். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...