அழகான அம்மா!
(பனிபடர்ந்த மலையின் மீது படுத்திருந்தேன் சிலையைப்போல, கனி கொடுத்த மாலைபோல கன்னி வந்தாள் கண் முன்னாலே, இரத்தத்தி லகம் படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய அந்த பாடல், பனிபடர்ந்த நோர்வே மலைச்சாரலின் பள்ளத்தாக்கு வழியாக, இருட்டு நேரம், மெதுவாக எனது கார் வழுக்கிக்கொ ண்டு கீழே நகர்கின்ற அந்தவேளை, காற்றிலே கரைந்து என் சிந்த னையை தூண்ட, எனது சிந்தையில் உதயமாகி ஒரு கரு, கதையாக விரிகின்றது),,,,,,,,,,,,
கேசவனுக்கு இருப்பு கொள்ளவில்லை, அவளின் அழகான அன்னநடையையும், அவள் அருமையாக, சேலை மடிப்புகளை செருகிய அந்த நீல வொயல் சாரியையும் அவனால் மற க்கமுடியவில்லை, அவளை பார்ந்த அந்த வினா டியே, டீயில் தோய்த்த பண்ணாக அவன் மனம், அவளின் நினைவிலே நனைந்தன. இன்று எப்ப டியாவது அவளது பெயரை கேட்டுவிட வேண்டும் என்ற அவாவில், கேசவன் தனது டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு, பஸ் தரிப்பிடத்தில் அவனுக்காக காத்திருந்தான் கேசவன். அவளும் வந்தாள் சொல்லிவைத்த மாதிரி மன்னார் பஸ்ஸும் வந்தது, இருவரும் ஏறிக்கொண்டனர். இந்த நிகழ்வுகள் கிட்டதட்ட பல தடவை நடந்தேறிவிட்டது, ஆயினும் கேசவனுக்கு அவளிடம் அவள் பெயரை கேட்க ஏதோ ஒரு கூச்சம்!
திடீரென்று ஒரு மாறுதல், அதுதான் கேசவனின் அந்த கனவுக்கன்னி, வாய்திறந்தாள்." ஏய் மிஸ்டர் உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் என்னை எப்பொழுதும் பின் தொடர்கின்றீர்கள், தைரி யமாக அவள் கேசவனை கேட்டாள். ஒருவாறு தயங்கித் தயங்கி கேசவன் சொன்னான், " நீங்க யார் என்று எனக்கு தெரியாது ஆனால் ,,, என்று இழுத்தவன், என் மனமோ, முடித்தால் உங்களைத்தான் முடிக்கவேண்டும் என்று எனக்கு சொல்கின்றது,, என்று மெதுவாக சொன்னான் கேசவன். ஓ அப்படியா என்று சொன்னவள், மிஸ்டர் நான் நிலாமதி, இங்கு மன்னார் கச்சேரியில் வேலைக்கு சேர்ந்து, ஒரு மாதமாகின்றது. நான் ஏற்கனவே திருமணமானவள், ஆனால்,,,,,, என்று நிறுத்தியவள் சற்று நேர மெளன த்தின் பின்னர், தனது கண்னின் ஓரத்தில் பணித்த கண்ணீர்த்துளிகளை துடைத்துவிட்டு, எனது கணவர் ஒரு மாவீரர் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தாள் நிலாமதி. அவள் போவதை இமை மூடாமல் வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் கேசவன்.
கேசவனின் நினைவுகள் இருபது வருடங்களுக்கு பின் நோக்கி அசைபோட்டது. என் செல்ல குட்டி கேசவா! நீ மாதவன் மாமாவைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று எட்டு வயதாய் இருந்த கேசவனிடம் அவன் அம்மா கேட்டாள். " மாதவன் மாமாவா? அவர் ரெம்ப நல்லவராச்சே எனக்கு அவரை ரெம்ப பிடிக்கும் அம்மா" என்று கேசவன் சொல்ல, "கேசவா மாதவன் மாமா உனக்கு அப்பாவாக வந்தால் உனக்கு பிடிக்குமா?" என்ற ஒரு கேள்வியோடு கேசவனைப்பார்த்தாள் அவன் இளம் விதைவை அம்மா. அப்பாவின் இடத்தில் மாதவன் மாமாவா? எட்டுவயதாய் இருந்த கேசவனுக்கு அதை ஜீரணிக்க தெரியவில்லை. ஒரே அடியாக தன் அம்மாவிடம், "அப்பாவின் இடத்தில் யாரையும் வைத்து பார்க்க என்னால் முடியாது" என்று கேசவன் அடம்பிடித்தான். அன்றில் இருந்து இளம் விதைவை, அழகான கேசவனின் அம்மாவின் ஆசைகள் புதையுண்டு போயின.
இப்போது தன் மனம், ஒரு அழகான இளம் விதவை நிலாமதி மீது மோகம் கொண்டதை எண்ணி, தன் அம்மாவின் ஆசை களை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டான். தனது அறியா பருவத்தின் அறியாமை அம்மாவின் நியாயமான ஆசைகளை புதைத்துவிட்டதே என்று எண்ணி மனதுக்கும் அழுதான் கேசவன்.,,,,,, இரத்ததிலகம் பாடல் தொடர்ந்து ஒலித்தது,,,,,,," குனிந்து நின்ற அழகைப்பார்த்தேன், குங்குமப்பூ நிறத்தைப்பார்த்தேன், கனிந்து நின்ற கண்ணம் பார்த்தேன், கண்னீரின் சின்னம் பார்த்தேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, யாவும் என் கற்பனையே,,,, அன்புடன் பேசாலைதாஸ். (பிற்குறிப்பு: இந்த கதையை இரத்தத்திலகம் படத்தின், பனி படர்ந்த மலையின் மீது என்ற பாடலை மனதுக்குள் அசை போட்டுக்கொண்டு வாசியுங்கள். நன்றி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக