பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2017

0439 இல்லாள் அகத்திருக்க, இல்லாதது ஒன்றுமில்லை!

இல்லாள் அகத்திருக்க, இல்லாதது ஒன்றுமில்லை!
அன்பர்களே நம்மிலே பலபேர் கணவன் மனைவியாக குடு ம்பம் நடத்துகின்றோம். ஆண்க ளாகிய நமக்குள் ஒரு கர்வம், நாம் தானே உழைக்கின்றோம், பெண்டாட்டிமாரெல்லாம் வீட்டிலே சமைத்து போடுகி ன்றார்கள் என்ற ஒரு ஏளனம் நமக்குள்., உண்மையில் பெண்கள் பொறுப்பாக இரு ந்து பிள்ளைகளை சீராட்டி வளர்க்கும் பெரும்பணியை அப்பாக்காளாகிய நம்மால் செய்துவிட முடியாது. இதோ  அதுபற்றி என் சிறுகதை இற க்கை அடிக்கின்றது! குமாருக்கு ஆபிஸில் பெரிய உத்தியோகம் பார்த்து, கை நிறைய உழைக்கின்றேன் என்ற ஒரு அகங்காரம். எதற்கெடுத்தாலும் அவன் மணைவி ரேகாவை திட்டி தீர்த்துக்கொண்டே இருப்பான். சேர்ட் அயன் பண்ணிவச்சிருக்கின்ற அழகைப்பார், என்ன இட்லி செய்துவைசிருக்கிறாய், மல்லிகை பூ மாதிரி இல்லாம சும்மா கல்லு மாதிரி, இப்படி தொட்டதுக்கெல்லாம் ஏதாவது குறை சொல்வதே குமாரின் வாடிக்கை. ரேகாவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள், பொறுமை தாண்டியது. ரேகா வெடித்தாள் ஒரு நாள்! இந்தா,,  பாருங்க, நீங்க கை நிறைய உழைக்கின்றேன் என்ற ஆணவத்தை விடுங்கோ, என்னை உழைக்கிறதுக்கு விட்டு ப்பாருங்கள், என் அப்பாவின் கம்பனியில் அவரோடு சேர்ந்து உழைத்து, மாதம் நீங்க உழைக்கிறதைவிட ஐந்து மடங்கு, நான் வீட்டுக்கு கொண்டுவாரேன், ரேகாவின் சாவால், குமாரின் ஆண்மையை சீண்டிவிட, ஒரு ஒப்பந்தம் உருவானது. ஒரு மாத த்திற்கு, குமார் வீட்டில் இருந்து பிள்ளைகளை பராமரித்து, வீட்டு வேலை பார்ப்பது, ரேகா வெளியே போய் பணம் சம்பாதிப்பது இதுதான் ஒப்பந்தம்! இரண்டு நாள் போனது, அடுத்த நாள் குமார் ரேகாவுக்கு டெலிபோன் எடுத்தான், ரேகா நீ என்ன லட்சனத்தில பிள்ளை வளர்த்திருக்க, ஒன்னுக்குமே அடங்குதில்ல, எனக்கு வந்த கோபத்தில ஒருத்தனுக்கு ஓங்கி அடிச்சிட்டன் அவன் மய க்கமாகிட்டான் எனக்கு ஒன்னுமே புரியல, சீக்கிரம் வா என்று ரேகாவை அழைத்தான். ரேகாவும் பதைபதைத்து வீட்டுக்கு ஓடி வந்தாள். என்னங்க எங்கே பிள்ளை என்று கத்தினாள். அவன் மயக்கம் தெளிந்து,  இப்போ தூங்கிறான் என்றான் குமார், அறைக்குள் சென்ற ரேகா வீல் என்று அலறினாள், என்னங்க நீங்க பக்கத்து வீட்டு பையனை அடிச்சி மயக்கம் போட வைச்சி ட்டிங்களே, இந்த பையன் நம்ம பையன்களோட வீட்டுக்கு வந்து விளையாடுபவனாச்சே! தலையில் அடித்துக்கொண்டாள் ரேகா. இப்போதுதான் குமாருக்கு புரிந்தது, அம்மாக்காள் செய்வது போல, அப்பாக்களால் முடியாது என்று அவன் பின் மூளை அவ னுக்கு உணர்த்தியது.  அன்புடன் மோசமான அப்பா, பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...