பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2017

0438 கோபம் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம்!

கோபம் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம்!
அன்பர்களே கோபம், ஆத்திரம் எனும் அழிவு சக்தி, நமது ஆழ்ம னதில் புதைந்து கிடக்கின்றது, அதை யராவது, அல்லது நம க்கு வெளியே நடக்கும் சக்தியா னது தூண்டிவிட்டால் தான் கோபம், ஆத்திரம் வெளியே கிளம்பி, பெரும் சண்டைக ளையும், தீயவிளைவுகளையும் உண்டாக்கிவிடும். என்வாழ்நாளில் நான் கண்ட அனுபவம் இது.   எனது நண்பன் ஒருவன், எனது பல்கலைக்கழக நண்பியை பற்றி, அவதூறாக கதைத்துவிட்டான், நானும் அந்த கதையை உண்மையென்று எண்ணி, ஒரு நாள் அவ‌ளிடம் சொல்லிவிட்டேன். அதைக்கேட்டுவிட்டு, அவளும் அமைதியாக சென்றுவிட்டாள். ஒரு சில நாள் கழிந்து, எனது நண்பனை சிலர் தாக்கினார்கள். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல, ரோட்டு ரவுடிகள். இதைக்கண்ட பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர். இப்போது சண்டை பல்கலைக்கழக மாணவர்களு க்கும், வெளியே உள்ள இளைஞர்களும் இடையில் உருவாகி, ஒரு வாரத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடும் அளவுக்கு போய்வி ட்டது. இறுதியில் சண்டைக்கான காரணத்தை ஆராய்ந்த போது, வெளியே உள்ள இளைஞனின் காதலியை, குறிப்பிட்ட பல்கலை க்கழக மாணவன் அபாண்டமாக கதைத்ததின் விளைவு என்று தெரியவந்தது. அப்போது தான் என் மனம் சிந்திக்கதொடங்கி யது. எனக்கு என் நண்பன் சொன்ன விடயத்தை நான் எனக்குள் வைத்திருக்கலாம், ஆனால் நட்புக்கு அது பாதகம் என்பதற்காக, நான் என் நண்பியிடம் சொன்னேன். அவளாவது அந்த கதையை தனக்குள் புதைத்திருக்கலாம் என்று யோசித்தேன். அது எப்படி சாத்தியமாகும், அவளும் தன் காதலுக்கு பாதகம் என் எண்ணி, தன்னை ஆழமாய் நேசிக்கும் தன் காதலனிடம் சொன்னது நியா யம் தானே! சரி அவளின் காதலன் தன் கோபத்தை தனக்குள் புதைத்திருக்காலாம் என்று எதிர்பார்ப்பதுவும்  தவறு, அது தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலை கொச்சைப்படுத்து வதாக அமையாலாம் அல்லவா! ஆக மொத்தத்தில் ஆத்திரம், கோபம் எல்லாம் நமக்கு வெளியே இருந்து இன்னொருவராள் கொட்ட‌ப்படுகின்றது என்பதே நான் கண்ட அனுபவம். இதை ஒரு கதை வழியாய் சொல்கின்றேன். ஒரு முனிவன் கடும் தவம் மேற்கொள்ள முற்பட்டார். ஆச்சிரமத்தில் அதிக சப்தம், எனவே ஒரு அமைதியான குளத்தில் ஒரு படகின் மீது அமர்ந்தபடியே தியானம் செய்தார். சில நாள் கழித்து, அந்த படகின் மீது ஏதோ ஒன்று முட்டி மோதி, தன் தவத்தை களைக்கின்றது என்று உண ர்ந்த முனிவர் கடும் சினம் கொண்டு, தவத்தை களைத்தவனை சபிப்பதற்காக கண்திறந்தார். அங்கே தன் படகின்மீது,  இன்னொரு வெறும் படகு மோதிக்கொண்டு இருப்பதை கண்டு, வெறும் படகின் மீது ஆத்திரப்படுவதா? என்று உணர்ந்து, தனக்குள் பொங்கிய கோபத்தை தன்க்குள்ளே அடக்கிக்கொண்டார். அன்பர்களே பொங்கிவரும் கோபங்க ளுக்கான காரியம் வெளியே இருந்தாலும், நம்முள் இருக்கும் கர்த்தா என்ற மனம்,  மூலம் கோபத்தை அடக்கலாம். இனி கோபத்தை அடக்கி அன்பாய் வாழ்வோமா? அன்புடன் பேசாலைதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...