பின் தொடர்பவர்கள்

வியாழன், 23 மார்ச், 2017

0443 கடவுள் காலம் காசு!

கடவுள் காலம் காசு!                       

என் கனவிலே கடவுள் வந்தார்
சுற்றி எங்கும் ஒளிப்பிரவாகம்!
தூதர்களும் தேவர்களும் புடை சூழ
வாடா மலர்களால் அவருக்கு அர்ச்சனை 

என் கையிலே ஒரு வாடிய தாமரை மட்டும்
மனம் ஒடிந்து ஓரமாய் ஒதுங்கி நின்றேன்.
கனவிலே வந்த கடவுள் கிருஷ்ணர்!
நேரே என்னிடம் வந்தார் மோகன சிரிப்போடு
ஒற்றைத் தாமரையை என்னிடம் கேட்டார்
நான் கிறிஸ்தவன் என்றேன் . அதற்கென்ன
என் பரம்பொருளில் ஒரு துகள் நீ என்றார்!
அசட்டு தைரியம் மேலிட நான் கேட்டேன்
ஆயிரம் வருடங்கள் உமக்கு ஒரு நாளாமே என்றேன்
ஆம் என்று அவர் தலையாட்ட , நானும் விடவில்லை
ஆயிரம் ரூபா ஒரு சதமா என்று மீண்டும் கேட்டேன்
ஆம் என்ற அதே பதில் தான் அவரிடம் இருந்து,
ஆசைப்பெருக்கில் ஒரு சதம் தாரும் என்றேன்.
அதற்கென்ன ஒரு நிமிடம் பொறுப்பாயா என்றார்.
ஒரு நிமிடம் கடவுளுக்கு கணக்கு போட்டபடி
என் கனவும் கலைந்து போக கண்விழித்தேன்.

                                                                  பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...