பின் தொடர்பவர்கள்

புதன், 22 மார்ச், 2017

0442 சித்தனா அல்லது பித்தனா நான்?

சித்தனா அல்லது  பித்தனா நான்?

ஒரு கவிதையா அது தானாகவே உங்களுக்குள்
கருக்கட்டும் வரை பொறுமை காக்க!
குறைப் பிரசவமாய், அறுவை பிரசவமாய்
படைப்புகள் அமையாதிருக்க அமைதி காண்பீர்!

எல்லாவற்றையும் மிஞ்சி உங்களிடமிருந்து
பீறிட்டு அது வெளிவரவில்லை யெனில்
அதைச் செய்யாதீர்கள்.
 இதயத்திலிருந்தோ, எண்ணத்தி இருந்தோ
தானாக வரவில்லை எனில் தயவுடன் விட்டு விடுக

படுக்கையில் பெண்கள் வேண்டுமென்பதற்காய்
பாக்களை பூக்களாய் தூவி விடாதீர்கள்
கவிதைக்கழகு கண்ணீர் துடைப்பது
காதலி, மனைவி, பெண் நண்பியிடம்
கவிதை சொல்லி, மகிழ்ச்சி கொள்வீர் முதலில்!

காமத்தை நியாயமாக்க கவிதை வேண்டாம்
மதுக்கிண்ணத்தில் கவிதை கொப்பளிக்கிறது
என்று உணரும் உமர் கயாம்கள் தேவையில்லை.
கோலமயில் துணை தேடும், கண்ணதாசர்களை
உங்கள் கவிதைகளில் தேட வேண்டாம்
பித்தனா சித்தனா அதை முதலில் முடிவு செய்வீர்

                                                                 பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...