பின் தொடர்பவர்கள்

வியாழன், 23 மார்ச், 2017

0445 குருதி தருவாயோ தோழா?

குருதி தருவாயோ தோழா?


பொதுவுடமைக் கொள்கை எழுத 
எனக்கு சிகப்பு மை தாருவாயா?
உன்னிடம் சிகப்பு மை இல்லையா?
உன் குருதியையாவது எனக்கு தா!

உன்னை வெட்டிக்  குருதி தர முடியாதா?
உன் மனைவியை வெட்டி குருதி தா!
உன்னால் அது  முடியாது என்கின்றாயா?
உன் குதிரையை வெட்டியாவது குருதி தா!

குருதிக்குப் பதிலாய் திராட்சை இரசம் நீட்டதே
திராட்சை இரசத்திற்கு, அதற்கு அதிக விலை
உலகில் மிக மிக மலிவானது குருதி ஒன்றே
எனக்கு இப்போது சிகப்பு மை வேண்டும்!

முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதே
அது என் அகராதியிலும்  இல்லை
பொதுவுடமைக் கொள்கையிலும் அது இல்லை
குருதியில் எழுதும் கொள்கைதான் உறுதியானது
எனக்கு தேவை இப்போது சிகப்பு மை ஒன்றே!

                                                                   பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...