பின் தொடர்பவர்கள்

சனி, 25 பிப்ரவரி, 2017

0425 ஜ‌னனம் ஒருவழி, மரணம் பல வழி

ஜ‌னனம் ஒருவழி, மரணம் பல வழி
அன்பார்களே! ஜனனம், மர ணம் என்பது வாழ்க்கையின் இயல்பான போக்கு. இதை ஏற்காமல், நாங்கள் வாழவே முடியாது. பிறப்பு நேர்ந்துவிட்ட பின், மரணம் என்பது இக்கண த்திலும் நேரலாம். அடுத்த நாளும் வரலாம். ஏன் பல வருட ங்கள் கழித்தும் நேரலாம். ஆனால், அது வரப்போவது என்பது உறுதி. இந்த உண்மையை உணர்ந்து, அந்தக் கவனத்துடன் ஒவ்வொரு கணத்தையும் எதிர்கொண்டால் தான், வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும். மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ற கவனத்திலேயே வாழ்பவர்கள், உண்மையில் வாழும் கணங்களையே முழுமை யாக வாழாமல், வாழ்க்கையையே  தொலைத்த‌வர்களாகிவிடு கிறார்கள். இன்றே இறந்து போக வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், மரணம் என்பது உத்தரவாதமானது என்பதை மறக்கா தீர்கள். என்றாவது ஒரு நாள் நானும் மடிந்து போவேன் என்பதே வாழ்க்கையின் பேரம்சம். இதை நினைவில் கொண்டால்தான், ‘எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப் போகிறேன்? இங்கே இரு ப்பதன் நோக்கம் என்ன? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொ ள்ளும் ஆவல் பிறக்கும். ஆன்மிகம் பற்றிய சிந்தனை மலரும். மரணம் என்பது உத்தரவாதமானது எனும்போது, அது இயற்கை வகுத்த வரிசையில் நேர்வதுதானே நல்லது? ஆறிலே செத்தால் அறியா வயதென்போம், இருபதில் செத்தால் அன்பவிக்கவேண் டிய வயசு என்போம். அதுவே எண்பதில் இறந்தால் அனுபவைத்த வது என்போம். ஆக மொத்தத்தில் நாம் எல்லோருமே நன்றாக வயது வந்து பேரப்பிள்ளை காண்டு இறக்க ஆசைப்படுவோம். அதுதானே மனித இயல்பு இதை மிக எளிதாக விளக்கும் ஒரு கதை சொல்ல்கின்றேன்.
                                                                                    சகல செளபாக்கியம் படைத்த செல்வந்தன் ஒருவன், ஒரு குருவிடம் சென்று, தனக்கு ஆசி வழ ங்கி, சில வார்த்தைகள் சொல்லச் சொன்னான். ‘’உன் தந்தை இறப்பார்… நீ இறப்பாய்… உன் மகன் இறப்பான்… உன் பேரக் குழந்தை இறக்கும்’’ என்றார் குரு. செல்வந்தன் மிகுந்த வேத னையுடன் ‘‘நல்ல வார்த்தைகள் சொல்லச் சொன்னால், இப்படி அபசகுனமாகச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்டான். குரு சொன்னார்: ‘‘இதைவிடச் சிறந்த ஆசி என்ன இருக்க முடியும்?’’ என்று. அன்பர்களே! ‘நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்!’ என்று வாழ்த்துவதுதானே உலக வழக்கம்! அது என்ன ‘நீ இறப்பாய்’ என வாழ்த்துவது?! ஆசீர்வாதம் செய்வதுபோல அல்லாமல் அபசகுனமாக பேசுவதுபோல் உள்ளதாக நீங்கள் நினைக்கலாம். அந்த குரு சொன்னதன் சூட்சுமம் இதுதான்! ’உன் குடும்பத்தில் முதலில் உன் மகன் இறந்து அப்புறம் நீ இறந்தால், அது மகிழ்ச்சி தருமா? இல்லை, பேரக் குழந்தை உன் மகனுக்கு முன்பாக மர ணமடைந்தால், சந்தோஷம் வருமா? அதுவும் இல்லை, தலை முறை தலைமுறையாக இயல்பான வரிசையில் மரணங்கள் நிகழட்டும் என்பதை விட வேறென்ன ஆசி வேண்டும் நமக்கு?  இதுதான் அந்த குரு சொன்ன வாழ்த்தின் உள் இரகசியம். சரி அன்பர்களே உங்களுக்கு இதை விட இலகுவாக என்னால் விளக்கமுடியாது. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...