வெட்கம் கொண்ட வெண்ணிலவே!
அன்று காலையில் வெண்ணிலா தனது ஒரே மகளை பாடசாலைக்கு அனு ப்பிவிட்டு, அவசர அவசரமாக கிளினிக் சென்றாள். ஏனோ வழமைக்கு மாறாக கிளினி க்கில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது. வெண்ணிலா பொறுமையாக அங்கிருந்த சோபாவில் அம ர்ந்து கொண்டாள் எதிரெ சின்ன வட்டமேசையில் மகளீர் சஞ்சிகை நயந்தாரவின் அழ கிய முகத்தோடு பளிச்சென்று கிடந்தது. அதை எடுத்து அதன் பக்கங்களை புரட்டிக்கொண்டி ருந்தாள் நேரம் போனதே தெரியவில்லை, இடைநடுவில் வெண்ணிலா என்று அழைத்தாள் ரிசெப்சனிஸ்ட்! டாக்டர் கோலிங் யூ என்று அவள் சொல்ல, வெண்ணிலா மெல்ல எழுந்து டாக்டரின் அறைக்குள் செல்கின்றாள். டாக்டரும் வாங்க வெண்ணிலா என்ன பிரைச்சனை என்ற பீடிகையோடு ஆரம்பி க்கின்றார். எனக்கு நல்ல சுகம் ஆன இப்போ நான் வந்தது என் கணவருக்காக என்றதும் ஓ தாஸிற்கு என்ன நடந்தது என்று டாக்டர் கேட்கின்றார். அது ஒன்றுமில்ல சார். இப்போது எடுத்த துக்கெல்லாம் எரிந்து விழுகின்றார். எந்த நேரமும் ஒரே பட படப்பு, சரியான தூக்கம் இல்லை, அவரால் நான் இருக்கும் அறையில் உட்காரக் கூட முடிவதில்லை. அவருக்கு நான் என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் வெண்ணிலா. டாக்டர் அவரை முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் கணவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினை க்கிறேன். எனவே நான் சில தூக்க மாத்திரைகளைக் கொடுக்கி றேன். இதைச் சாப்பிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்,” என்றார். அதற்கு வெண்ணிலா, “மிக்க நன்றி டாக்டர். இந்த மாத்திரை களை அவருக்கு நான் எந்தெந்த வேளைகளில், எவ்வளவு கொடு க்க வேண்டும்?” என்று கேட்டாள் வெண்ணிலா. டாக்டரோ, “மாத்திரை அவருக்கல்ல; உங்களுக்குத்தான். நீங்கள் தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் அவருக்கு சிறிதாவது ஓய்வு கிடைக்குமே,” என்றார். வெண்ணிலா வெட்கத்தோடு, மெல்ல சிரித்துக்கொண்டு வெளியேறினாள்! யாவும் கற்ப னையே அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக