பின் தொடர்பவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2017

0386 கடவுளிடமிருந்து கடிதம்!

கடவுளிடமிருந்து தமிழர்களுக்கு ஒரு கடிதம்

பிரபஞ்ச சக்தியேதான் 'கடவுள்' என்றால், 'கடவுள்' தமிழருக்கு
ஒரு கடிதம் எழுதினால், அது பின்வருமாறு அமையக் கூடும் >>
தமிழர்களே,
உம்மில் பலர் என்னைச் சிவபெருமான் என அழைக்கிறீர்கள். நான் சுடுகாட்டில் உறைவதாகக் கூறுகிறீர்கள். நான் பிரபஞ்ச நடனம் ஆடுவதாகக் கூறுகிறீர்கள். எனது நடனத்துக்கு நானே உடுக்கு அடிப்பதாகக் கூறுகிறீர்கள்.
உடுக்கு ஒரு தோல் வாத்தியம்.
அது 'பறை' வாத்தியக் குடும்பத்தில் ஒன்று.
உம்மில் ஒரு சாரார் --தாம் 'உயர்ந்த சாதி' எனவும்
பறை அடிப்பவர்கள் 'கீழ் சாதி' எனவும் கூறுகின்றனர்.
அப்படியானால்,உடுக்கு அடிக்கும் என்னையும்
'கீழ்சாதிப் பறையன்' என அழைக்க வேண்டும் !
எனது பெயரால், மதம் ஒன்றை உருவாக்கித்
தம்மைச் 'சைவர்கள்' என அழைப்பவர்கள் தாம்
'பறையர்கள்' எனப் பிரகடனம் செய்ய வேண்டும்.
'உயர் சாதி' / 'கீழ் சாதி' என்னும் சமூகப் பிரிவினைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். அல்லது, எனது பெயரில் இயங்கும் சைவ சமயத்திலிலிருந்து 'உயர்
சாதியினர்' எனத் தம்மை அழைப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் !
நான் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி.
பிரபஞ்சம் முழுவதிலும் நான் ஊடுருவியுள்ளேன்.
உம்மில் ஒவ்வொருவரிலும் நான் இருக்கிறேன்.
சகல சீவராசிகளிலும் 'சீவனாக' நானே இருக்கிறேன்.
உருவமற்ற எனக்கு -- நீங்கள் உருவங்கள் படைத்ததும், கோவில்கள் கட்டியதும் எனக்குச் சடங்குகள்
திருவிழாக்கள் செய்வதும் -- யாவுமே தவறு !
உடனடியாக இவற்றைக் கைவிடுக !
இருக்கும் கோவில்கள் சிலைகளை உடைக்கத் தேவையில்லை.
கோவில்களைக் கலை - கலாச்சார - கல்வி - சமூக சேவை நிலையங்களாகப் பயன் படுத்துங்கள்.
சிலைகள் பாதுகாக்கப் படட்டும் ... ஆனால், சிலைகளுக்குப் பூசைகள் சடங்குகள் செய்வதை நிறுத்துங்கள்.
சைவர்கள் என உம்மை அழைப்பவர்கள் -- உருவ வணக்கத்தைக் கைவிட்டு, மனத்தினால் மட்டும் என்னை வழிப்படப் பழகுங்கள் !
உங்கள் எல்லாரிலும் நான் இருக்கிறேன்.
இதனால் எல்லோரும் சமம்.
உயர்சாதி / கீழ்ச்சாதி என நீங்கள் நடந்துகொள்வது உமக்கும் அவமானம். எனக்கும் அவமானம்.
மறுபடியும் கூறுகிறேன். தாம் 'உயர்சாதி' என நினைப்போர் -- தம்மைச் 'சைவர்கள்' எனக்கூறாது இருப்பார்களாக. சைவ சமயம் என நீங்கள்
பின்பற்றும் சமயத்தில் இருந்து 'உயர்சாதி' - 'ஆணவக்காரர்' விலகுவார்களாக. !
புதிதாகக் கோவில்கள் கட்டாதீர். கோவில்களுக்குப் பதிலாகக் கலை - கலாச்சார - கல்வி - சமூக சேவை நிலையங்கள் கட்டுங்கள்.
வீடுகளிலிருந்தும் / மரங்களின் கீழும் - வெட்ட வெளிகளில் நின்றும் என்னை வணங்குங்கள் !
பக்திநெறி வழிநின்று சித்த மலம் அறுத்திடுங்கள் !
எனக்கும் உங்களுக்கும் நடுவில்
இடைத்தரகர்கள் நுழைய அனுமதிக்காதீர் !
உமது வழிகாட்டுதலுக்காகத் தமிழ்ப் பெரியோர் கூறி வைத்துள்ள பல நல்ல அறிவுரைகளில்
சிலவற்றை நினைவூட்டுகிறேன் ...
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் அவன் தாள் நினை ...
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ...
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கு அடியேன் ...
'கடவுள்' பிறப்பிலி / உருவிவி / பெயரிலி.
சக்தி சிவம் ...
சீவன் சிவம் ... ஊனுடம்பு ஆலயம் ...
அன்பே சிவம் ... ஒன்றே குலம் ... ஒருவனே தேவன் ...
இறை உள்ளில் ஒருங்கே !
அன்பின் வழியது உயிர்நிலை ...
சாதி இரண்டு -- இட்டார் பெரியோர் ... இடாதோர் இழிகுலத்தோர் !
யாதும் ஊரே ... யாவரும் கேளிர் !
(பிரதேச வாதம் / சாதீயம் / இனவாதம் ... யாவும் தவறு)
இங்ஙனம்,
பிறப்பற்ற, உருவற்ற, பெயரற்ற, பிரபஞ்ச சக்தி --
உங்களைப் பொறுத்தவரை, பறையன் சிவபெருமான்
(இதை எழுதியவர் அனுமதிப்பின் அவர் பெயரை வெளியிடலாம். இப்படியெல்லாம் நான் எழுதமாட்டேன், அது தெய்வத் குற்றமாகிவிடும்!!)   எனது நண்பர் தியாகராஜா விஜேந்திரன் இதயத்தில் இருந்து முக நூல் வழியாக வெளிவந்த கடிதம். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...