பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0379 உள்ளத்திற்குள்ளே ஒழிந்திருபது ஒன்றல்ல கண்ணா!

உள்ளத்திற்குள்ளே ஒழிந்திருபது ஒன்றல்ல கண்ணா!


அந்த ஊரிலிருந்த சிற்பி ஒருவர், எவ்வளவு மோசமான கல்லிலிரு ந்தும் ஓர் அழகான சிற்பத்தை வடிக்கும் அபாரத் திறமையு ள்ளவர். இவ்வளவு அழகாக இதை எப்படி உங்களால் வடிக்க முடிந்தது என்று கேட்டால், இந்தச் சிற்பம் ஏற்கனவே அந்தக் கல் லுக்குள்ளே இரு ந்தது. இதைச் சுற்றியிருந்த வேண்டாத பகுதிக ளையெல்லாம் எடு த்துவிட்டேன். அவ்வளவுதான், உள்ளே இரு ந்த இது வெளியில் வந்து விட்டது என்பார். ஒரு சின்ன பாறை அல்லது கருங்கல்லைப் பார்த்தால், அந்தக் கல்லின் அமைப் பைக் கவனித்துவிட்டு, இதில் ஒரு துறவி உட்கார்ந்திருக்கிறார், ஒரு வீரர் ஒளிந்திருக்கின்றார் என்று சொல்வார் அவர். உண் மை, தூய்மை, இவற்றுக்கு எடுத்து க்காட்டாக, இருக்கக் கூடிய ஒரு புத்தர் சிலையை வடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் களாக ஆசைப்பட்டார் அவர். அதற்குத் தகுந்த மாதிரி எந்தக் கல்லும் கண்ணில் தென்படவில்லை. அதனால், அந்த ஊரிலி ருந்த புத்த மடாலயத்துக்குப் போனார். அங்கே ஒரு புத்த துறவி யைச் சந்தித்து, சுவாமி, புத்தரின் தூய்மை ஒளிந்திருக்கின்ற அந்தக் கல் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். இன்னும் நீங்கள் அதைக் கண்டுபிடிக்கவில்லையா, சரி, கவலைப்படாதீர்கள், என்கூட வாருங்கள் என்று, அந்த மடாலயத்தின் பின்பக்கம் அழை த்துச் சென்றார் துறவி. அங்கே ஒரு கிணறு இருந்தது. எட் டிப் பாரு ங்கள் என்றார் துறவி. எட்டிப் பார்த்த சிற்பிக்கு, தண் ணீரிலே தனது உருவமே தெரிந்தது. அப்போது துறவி சொன் னார் – புத்தரை நாம்தான் ஒளித்து வைத்திருக்கிறோம். அவர் நமக்குள்ளேதான் ஒளிந்து இருக்கிறார். நம்மிடமுள்ள கோபம், போலித்தனம், பதற்றம், பேராசை போன்றவை, அவரை அடை யாளம் தெரியாதபடி மறை த்து வைத்துள்ளன. அறிவு என்கிற உளியால், அவற்றையெல்லாம் செதுக்கி எடுத்துவிட்டால், அந்த அழகான புத்தர் வெளியே வருவார் என்று. நம் ஒவ்வொருவருக் குள்ளும் மறைந்திருக்கும் ஒளியைக் கண்டுபிடிக்க, நம்மிலுள்ள தேவையற்ற குணங்களை அகற்ற வேண்டும்.அன்பர்களே
உள் ளத்திற்குள்ளே ஒழிந்திருப்பது ஒன்றல்ல என்பதை நாம் மறவோம் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...