பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0378 சலனமற்ற மன நிலை

                     சலனமற்ற மன நிலை

                                                       
ஓர் ஊரில் ஓர் இசைக் கலை ஞர் இருந்தார். அவரிடம் நல்ல இசை த்தி றமை இருந்தது. கூடவே கலைஞர்களு க்கேயு ரிய சில தீய பழக்க ங்களும் இருந்தன. தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார் அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக் கங்களை விவரித்தார். அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக் காரர், தீயவர் எனப் பலவாறு அவரை வசைபாடினார். அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர் அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றை க்கெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார். அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள் வித்தை காட்டும். சங் கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம் புரியும்!’ என்றார். அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான ஏமா ற்றுப் பேர்வ ழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர், புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது, இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால் இந்தப் பக்கம் வருகி றார், என்று விழித்தனர். ‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவ ரைப் புகழ்கிறீர்களா? இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட் டார் அவர்க ளில் ஒருவர். ‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கி றேன். எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன் என்றோ, நல்லவன் என்றோ கூற உங்க ளிடம் என்ன அளவு கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள் வதோ. எதிர்ப்பதோ என் வேலை யும் இல்லை. அதற்கான உரி மையும், என்னிடம் இல்லை. அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே! அவர் அவராக இரு க்கிறார். அவர் செய லை அவர் செய்கிறார். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று முடித்தார் ஜென் குரு. ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாய் காண லாம்
அன்புடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...