பின் தொடர்பவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2017

0384 "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும்

"நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும்

ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம், "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்கு சீடர்களுள் ஒருவர், "வேறு என்ன, நூறு வயது தான்" என்று கூறினார். குருவோ, "இல்லை" என்றார். "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவர் கூறினார். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமை யிழந்து, "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு, "ஒரு வினாடி தான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். பின் குரு, "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும், அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்கு சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவ த்தைப் புரிய வைத்தார்.  ஆம் அன்பர்களே இந்தக்கணமே சாசுவதம்! கடந்து போன வினாடி கனவு ந்மக்கு முன் வரவிருக்கும் வினாடி மாயை உயிர் இருக்குமோ இருக்காதோ என்று யாருக்கும் தெரியாது ஆக மொத்தத்தில் இந்த வினாடியே மெய்! காலத்தை வெல்வோமா?  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...