பின் தொடர்பவர்கள்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

0327 மீன் என்ற ஆசை

மீன் என்ற ஆசை 
ஒருசமயம் ஒருவர் குளத்தங் கரையில் மீன்பிடித்துக் கொ ண்டி ருந்தார். அவர் தூண்டி லில் அகப்பட்ட மீன் கரையி லே கிடந்தது. அந்தச் சமயம் உயரே பறந்துகொண்டிருந்த ஒரு பருந்து, கரையிலே கிட ந்த மீனைப் பார்த்தது. அவ்வள வுதான். அதைக் குறி பார்த்து அதற்கு நேரே பறந்து வந்து அந்த மீனைக் கொத்தி எடுத் துக் கொண்டு உயரே பறந்தது. அதைப் பார்த்த காகங்கள் கா..கா.. எனக் கத்தின. உடனடியாக, நூற்றுக்கணக்கான காகங் கள் பறந்து வந்து அந்தப் பருந்தை துரத்திச் சென்று, அதைச் சூழ் ந்துகொண்டன. ஒரே அமளி. பருந்தும் படாதபாடு பட்டது. அங் கேயும் இங்கேயும் பறந்து பார்த்தது. காகங்கள் பருந்தை விடுவ துபோல் தெரியவில்லை. நேரம் நேரம் ஆக ஆகத் தொல்லை யும் அதிகரித்தது. பருந்து எந்தத் திசையில் பறந்தாலும் காகங் கள் கூட்டமும் பருந்துக்குப் பின்னாலே பறந்தது. பருந்து களை ப்படைந்தது. அதன் அலகிலிருந்த மீனும் நழுவி கீழே விழுந் தது. அவ்வளவுதான். இப்போது அவ்வளவு காகங்களும், பருந் தைத் துரத்துவதை விட்டுவிட்டு, கா..கா.. எனக் கத்திக்கொண்டு தரையை நோக்கிப் பறக்கத் தொடங்கின. அப்பாடா... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே ஒரு மரக்கிளையில் போய் அமர் ந்தது பருந்து. பின்னர் சிந்தித்துப் பார்த்த பருந்துக்கு ஓர் உண் மை புரிந்தது. இவ்வளவு குழப்பத்திற்கும் இந்த மீன்தான் பிரச்சனை. இப்போது அந்த மீன் என்னிடம் இல்லை. நானும் நிம்மதியாக இருக்கிறேன் என்று பருந்து சொல்லிக்கொண்டது. (ஸ்ரீஇராமகிருஷ்ணர் சொன்னது)மீன் என்ற ஆசை நம்மிடம் இருக்கும்வரை, துன்பம், கவலை, அமைதியின்மை போன்றவை நம்முடன் இருக்கும். ஆசைகள் அகலும்போது மனதில் நிம்மதி கிடைக்கிறது. அகவாழ்வைப் பரிசோதிக்க அழைக்கிறது அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...