பின் தொடர்பவர்கள்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

0326 துன்பம் இழைத்தவருக்கு, பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது, சாதாரண மனிதர்களின் இயல்பு.

துன்பம் இழைத்தவருக்கு, பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது, சாதாரண மனிதர்களின் இயல்பு. 
ஒரு புலி வேடனைத் துரத்திக் கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று, ‘இவ்வேடன் நமது மிருக குலத்துக்கே பகைவன், இவனைக் கீழே தள்ளி விடு!’ என்று. ‘இருக்கலாம். ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன்’ எனச் சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து, புலி வேடனிடம் கூறிற்று, ‘எனக்குப் பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்’ என்று. வேடன் கரடியைத் தள்ளிவிட்டான். கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம், ‘இந்த மனிதன் நன்றி கெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனைத் தள்ளிவிடு!’ என்று சொன்னது. அதற்கு கரடி சொன்னது, ‘எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தி னின்று வழுவினான் என்பதற்காக, நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது என்பது, அறத்தினின்று நான் தவறியது ஆகும்’ என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.துன்பம் இழைத்தவருக்கு, பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது, சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...