பின் தொடர்பவர்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2015

0249 மனக்கணக்கு

மனக்கணக்கு

அன்பர்களே! நாம் மற்றவர்களோடு உறவாடும் பொழுது அல்லது பழகும் போது, அவர்களைப்பற்றிய ஒரு கணி ப்பீடு நமது எண்ணங்களில் உருவாகுவது இயற்கை. சிலவேளைகளில் ஒருவரின் செயலை வைத்து அவரை கணக்கிடுகின்றோம் அது சில வேளை தவறாக முடிகின்றது.  ஒருவருக்கு அறிவும் அனுபவ மும் அதிகமாகவே இருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி உடனடியாக கணிப்பதைச் சற்று தள்ளிப்போட வேண்டும். மனக்கணக்கு தவறலாம். மனிதரைப் பற்றிய கணக்கு தவறக்கூடாது....!நாம் அவசரப்பட்டு மனிதர்களை எடை போடுவதை தவிர்க்கவேண்டும் என்பதை இந்த சின்ன சம்பவம் ஆழமாக அழகாக சொல்கின்றது.     

                          அந்த வீட்டில் அந்தச் சிறுமி சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது இரு கைகளில் இரண்டு ஆப்பிள் பழங்களை வைத்துக்கொண்டு மாறி மாறி அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த அச்சிறு மியின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய், எனக்கு ஒன்று கொடு" என்றார். ஒரு வினாடி தன் தாயைப் பார்த்த அச்சிறுமி, உடனே ஓர் ஆப்பி ளைக் கடித்தார். அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டார். தாயின் முக த்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் மகள் மீது கோபம் வந்தது. தனது மகள் இவ்வ ளவு சுயநலத்தோடு இரு க்கிறாளே என்று வருந்தினார் தாய். 

                                                தனக்கு ஒரு ஆப்பிளையாவது அல்லது அதில் பாதியையா வது மகள் தருவாள் என்று எதிர்பார்த்தார் தாய். தான் கேட்டவுடன் தனது செல்ல மகள் இரண்டு ஆப்பிள்க ளையும் உடனடியாக கடித்து விட்டதால் அடைந்த ஏமாற்ற த்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார் தாய். ஆனால் அச்சிறுமி, தாயிடம் "அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு.. நீங்க இதை எடுத்துக்கங்க!" என்று சொல்லி இனி ப்பான ஆப்பிளைத் தாயிடம் கொடுத்தார். 

                                                   தாய்க்கு இருப்பதில் சிறப்பானதை கொடுக்கவேண்டும் என்று குழுந்தை நினைக்கின்றது, ஆனால் தாயோ அறியாமையால் தன் சொந்த மகளையே தவறாக மனதில் கணக்கிடுகின்றார். கடவுளும் இப்படித்தான், நாம் நமக்கு வேண்டியதை கேட்டு ஜெபிப்போம் ஆனால் அவரோ வேறு ஒன்றை நமக்கு தருவார். நாம் கேட்டதைவிட, கடவுள் தரும் நன்மை நிறைந்த ஆசீர்வாதமாய் அமையும். இரு ஆப்பிள்களை வைத்து தனது தாய்க்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லி விட்டார் சிறுமி.  அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...