பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

0250 நீங்கள் யார்?

நீங்கள்  யார்?

இயேசு சபையைச் சேர்ந்த Carlos Valles என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது. இன்றைய நமது சிந்தனைக்கு விருந் தாக எனது வலைப்பூங் காவில் விரிகின்ற. கதை இப்படி தொடங்குகி ன்றது அன்பர்களே! ஒரு கிராமத்து அப்பவி ஒருவர் ஒரு நகரத்துக்கு வருகின்றார் ,,,,,,, நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்ப தைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க் கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.
இரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.
காலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார்.
விடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார்.

இந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா? அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா? எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும்.
வெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் ‘நான் யார்’ என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது.அன்பர்களே நீங்கள் எப்படி? நீங்கள் யார் என்ற கேள்வியை நீங்களே கேட்டு உங்களை,,ஆய்வுசெய்ய உங்களை விட்டுச்செல்கின்றேன். அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...