பின் தொடர்பவர்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

0234 நிராகரிப்பு

நிராகரிப்பு

அன்பர்களே தமிழராகிய நம்மிடம் ஒரு எண்ணமுண்டு, அடுத்தவன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான்? என்ற கேள்வி கணைகளை தனக்குள்ளே தொடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவார்கள். நம்மை சூழ்ந்துள்ளவர்களிடம்  நமது மதிப்பு உயர்வாக இருக்கவேண்டும் அது உண்மைதான்! ஆனால் நம்மை சூழ்ந்துள்ளவர்கள் எப்படியானவர்கள் என்பதை முதலில் நாம் எடை போட வேண்டும். அவர்கள் நம்து வளர்ச்சியில் உண்மையில் அக்கறை கொண்டவர்களா? என்பதை கவனிக்கவேண்டும், அப்படிப்பட்டவர்களின் மதிப்பீடு நமக்கு அவசியமானது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைப்பது சுத்த மடத்தனம்! நம்மைப்படைத்த கடவுளினால் கூட அது இயலாத காரியம் என்று என் சிறுமதி எனக்கு சொல்கின்றது. நான் ஒரு கிறிஸ்தவன், அதுவும் சிறு பராயம் தொட்டு, துறவியாக வேண்டும் என்ற எண்ணத்தில் துறவிகள் மடத்தில் சேர்ந்தவன். துறவி என்றால் என்ன என்று உணராத பருவம் அது! இப்போது அது புரிகின்றது, எனக்கென்று ஒரு ஆசை இருந்ததில்லை, என் திருமணம், குடும்ப‌ வாழ்வு எல்லாமே அது வழி தானே நடக்கும் என்று விதி வழி விட்டவன் நான்! எல்லாமே நன்றாகவே நடக்கின்றது, ஆற்றில் இழுபட்டு செல்லும் மரக்குற்றி போல, வாழ்வு என்ற விதி வழி ஓட்டத்தில் இழுபட்டு செல்லும் ஒரு மரக்குற்றி போல நான்! இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு புத்தரைப்போல, எனக்கென்ற ஒரு ஆசை இல்லாதவனாய்,,,,,,,, என் வாழ்வு! எனவேதான் எனக்கு இயேசுவைவிட புத்தரின் தத்துவங்கள் எனக்கு மிக பிரியமானவை, அழகான இளம் மனைவியை உடல் உறவின் நடுவில் பிரிந்து சென்ற அரச இளங்குமரன் அல்லவா அவர்! எனவே புத்தரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவம் இன்று என் உள்ளத்தில் ஒரு கதையாக விரிகின்றது!

நம்மை எதிர்ப்போர்கள் அல் லது நமது வளர்ச்சியை கண்டு பொறுக்கா தவர்கள், நம்மை எதிர்த்து பல கருத்துக் களை கூறுவார்கள் அதனை நாம் பொருட் படுத்தினால் நாம் பலவீனர்களாகிவிடு வோம். நம்மை காயப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒருசிலர் அப்படி செய்வதுண்டு. அதனை நாம் ஏற்றுக்கொண்டு வேதனை ப்படவேண்டும் என்ற அவசியமில்லை. அதனை நிருபிக்கும் ஒரு ச‌ம்பவம், புத்தருக்கு ஏற்பதுண்டு.

                                                                         புத்தர் தன் பயணத்தின்போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருந்தவர்கள் பெரும்பா லும் மத போதகர்கள். புத்தரையும், அவருடைய போதனைக ளையும் வெறுத்தவர்கள். எனவே ஆனந்தா என்ற அவருடைய முக்கியச் சீடர், அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று பத்தரி டம் கூறினார். ஆனால் புத்தர் அதை மறுத்து, அந்த வழியாகச் சென்றார். அவர் ஊருக்குள் நுழைந்ததுமே, அந்த மதவாதிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித சலனமும் இன்றி, அவ்விடத்தை விட் டுச் சென்றார். அந்த ஊரைக் கடந்ததும், இளைப்பாற ஓரிடத் தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க முடியவில்லை “குருவே! அவர்கள் உங்களை இந்த அளவு கேவலமாக பேசி விட்டனர், நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம், குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து, ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே” என்றார். புத்தர் அமைதியாக, தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி, “ஆனந்தா! இது யாருடை யது?” என்று கேட்டார். “இது உங்களுடையது” என்றார் ஆனந்தா. “இல்லை இது உன்னுடையது, இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்” என்றார் புத்தர். சிறிது நேரம் சென்றதும் மீண்டும் ”ஆனந்தா! இது யாருடையது?” என்று கேட்டார். “இது என்னுடையது சுவாமி!” என்றார் ஆனந்தா. “எப்படி?  இது என் னுடையது என்று சொன்னாயே?” என மறு கேள்வி கேட்டார் புத்தர். “சுவாமி! இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள். நான் அதை ஏற்றுக் கொண்டதால் இது என்னுடையதாயிற்று” என்று பதிலளித்தார் ஆனந்தா. “ஆம், நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால், அது உன்னுடையதாயிற்று, அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவை என்னுடையதல்ல” என்று புன்ன கைத்தார், புத்தர் பெருமான். ஆம் அன்பர்களே உலகம் ஆயிரம் சொல்லும் சொல்லட்டுமே, அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் நமது மனமாக என்றும் இருக்கவேண்டும் என்பதே எனது எண்ணம் என்றும் அன்பின் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...