எண்ணங்கள் போலவே வடிவங்கள்
அன்பர்களே! நாம் என்ன நினைக் கின்றோமோ அதுவாகவே மாறிவிடுகின்றோம் என் பது உளவியல் உண்மை, இதை வாழ்வியலிலும் நாம் பலதடவை கண்டிருக்கின்றோம். நம் சிந்தனை செயல் எல்லாமே எமது சிந்தனையின் படி மாற்றம் அடைகின்றன.ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத் தோடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவர் மட்டும் பாடத்தைக் கவனிக் காது ஏதோ சிந்தனையில் இருந்தார். "பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்தி ருந்தாய்" எனக் கேட்டார் ஆசிரியர். அதற்கு அம்மா ணவர், தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்ப தாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப் பதாகவும் கூறினார். ஆசிரியர் அவரிடம், "அதோ எதி ரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளை யைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார். அம் மாணவரும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து, ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணிய படி இருந்தார். அதன்பின் இப்படி இருப்பது அம்மாண வருக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றார். பள்ளிக்கு வந்தவர், வகுப்பறை யின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆசிரி யர் அவரிடம், "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்துவிட்டால் வகுப்பு அறைக்குள் வரலா மே" என்றார். அதற்கு அம்மாணவர், "இனிமேல் நான் குன்றுக்குப் போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது" என்றார். இப்பதிலால் ஆச் சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவர் "எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன" என்றார். இடைவி டாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிரு ந்த மாணவருடைய மனம் அவரையும் காளையா கவே சிந்திக்கத் தூண்டியது. நல்லதை நினைத்தால் நாமும் நல்லவனாக மாறலாம். மாறமுயல்பவர் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக