பின் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஜூலை, 2015

0207 கண்ணீரே பதிலானது.

 கண்ணீரே பதிலானது. 

ந்து வயது சிறுமி, வேலைக்கு சென்று வந்த தன் அம்மாவிடம் கேட்டாள், ‘ஏம்மா.. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போகல? என்று.

‘அதைப் போய் யாராவது ஆயாகிட்ட கொடுப்பாங்களா’என்றார் அம்மா.

‘சரி, சாவி வேண்டாம். நம்ம பீரோவுல இருக்குற நகை, பணத்தை எல்லாம் ஆயாகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாம்ல’என திருப்பிக் கேட்டார் அச்சிறுமி.

‘என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்ட கொடுக்கக் கூடாதும்மா’ என எரிச்சலுடன் பதிலளித்தார் தாய்.

‘அப்போ ஏம்மா என்னை மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப்போற? அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா?’ என மகள் கேட்டபோது, அம்மாவிடம் பதில் இல்லை. கண்களின் ஒரத்தில் எட்டிப்பார்த்த கண்ணீரே பதிலானது.
அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...