பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0156 பற்றுக பற்றறு,,,,,,,

பற்றுக பற்றறு,,,,,,,

அன்பு உள்ளங்களே! பற்றுக பற்றற்று என்பது வள்ளுவன் வாக்கு. பற்றுக பற்றற்று என்பது ஒரு எதிர் முரன்  வசசனமாக உங்களுக்கு தெரிகின்றதா? அதாவது பொருள் பண்டம் பணம் இவை இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவைதான், அது நமக்கு தேவைதான் ஆனால் அதன் மீது பற்றுக்கொண்டு, அதுதான் வாழ்க்கை என்று வாழவேண்டிய அவசியமில்லை. நம்மில் ஒரு சிலர் அப்படித்தான் காசுதான் உலகம்! என்று வாழ்பவர்கள். உறவுகளுக்கு மனிதர்களுக்கு மதிப்பளிப்பதில்லை. இதை அழகாக விளக்குகின்றது. வெல்லவதற்கு ஒன்றுமில்லை என்று பாரசீகத்தை வென்றபின் இறுமாப்பாக கூரிய மாவீரன் அலக்சாண்டரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் கதையாக மலரவிட்டிருக்கின்றேன்.


                                                                            ஒரு பஞ்சப் பரதேசி.துறவி.சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.குளிர் காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார். ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார். ''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர். அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி. ''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.  ''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி. ''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர். ''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி. அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...