பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0155 உதவிகள் எல்லாம் புண்ணியம் சம்பாதிபதற்காகவா?

உதவிகள் எல்லாம் புண்ணியம் சம்பாதிபதற்காகவா?
நாம் மற்றவர்களுக்கு ஆபத்துக்காலங்களில், உதவி செய்வது எந்த வித எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஆனால் நடைமுறை உலகில் அப்படி நடப்பதாக தெரிய வில்லை. யாரவது ஒரு உதவி செய்தால் அது சுய விளம்பரத்திற்காக, சுய தேவைகளை மனதில் கொண்டு உதவி செய்கின்றார்கள். அது தவ றான சிந்தனி இதை அழகாக விபரிக்கின்றது இந்த கதை
                                                                                                                                      ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ் வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழு ந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியா மல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான்.

                                                                                                                                         அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன் பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என் னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிரு க்கு போராடி கொண்டி ருக்கிறார்களோ அவர் களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக் கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள் ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப் பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதி கரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல் கிறார்.
                   மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யப்படு கிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...