பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0165 தன்னலமறுப்பு


தன்னலமறுப்பு
அன்பர்களே சில சந்தர்ப்பங்க ளிலே நாம் மட்டும் வாழ்ந்தால் போது என்ற சுய நல எண்ணத் தோடு வாழ்கின்றோம் அதனால் அழிவு நம்மக்குத்தான். இதனை விளக்க அழகான ஒரு சிறு கதை பசி தாங்க முடி யாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திரு ந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இத னால் பாலைக் குடிக்க முடியாமல் எலி கள் திண்டாடின. இதை யடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலை க் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்க லாம் என திட்டமிட்டு, அதை செய ல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டு ம்..." கீழே இரு ந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது. இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி என க்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடிய வில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது. துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.   அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...