பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0164 சந்தோசம் தரும் சாந்தம்

சந்தோசம் தரும் சாந்தம்


சிங்கமும் கழுதைப்புலியும் பசு வைப் பிடித்து வைத்தி ருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதை ப்புலி தன் குட்டியை சிங்கத்தி டம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குட லை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதை ப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லி யது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க் கப்போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதை ப்புலி வந் ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதை ப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியத ற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர் க்க முடிவு செய்து விட்டோம்." குடலை சிங்கத்தி டம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதை க்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கை யும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி. நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத் துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...