பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0108 ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை

ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை

ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற் காக சந்தைக்குச் சென்றார். அங்கே ஒரிடத்தில் பத் துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற் றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா விசாரித்தார்.
நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங் கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக் குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
                                         உங்கள் சந்தேகம் என்ன ? என்று முல்லா கேட்டார். உண்மை .. .உண்மை என்ற எல் லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார். முல்லா பெரிதாகச் சிரி த்தார், இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்க வில்லையா ? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...