பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0071 கனவு

கனவு


இரவுக்காவல் காப்பவன் ஒருவன் தூக்கத்தில் ஒரு கனவு கண்டான். அந்த கனவிலே அவன் தன் முத லாளி பயணம் செய்துகொண்டிந்த‌ விமானம் விபத்துக்குள்ளாகுவ தும் அதிலே பயணம் செய்த தனது முதலாளி இறப்பதாகவும் கனவு கண்டான். அதிர்ச்சி அடைந்து போனான் அந்த காவலாளி ஏனெனில் அதிகாலையில் தன்னுடைய‌ முதலாளி விமானத் தில் அமெரிக்கா பயணம் செய்ய இருந்தார். உடனே முதலாளியி டம் போய் தன்னுடைய கனவை அவ ருக்குச் சொல்லி அவரு டைய விமானப்பயண‌த்தை கைவிடும்படி மன்றாடினான். முதலாளியும் ஒரு வாறு தன் பயணத்தை ஒத்திவைத்தார். காவலாளி கனவுகண்டது போல முதலாளி பயணம் செய்யவி ருந்த‌ அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அனைவ ரும் விபத் தில் மாண்டு போனார்கள். மறுநாள் அந்த முதலாளி,தன் உயி ரைக்காப்பாற்றிய‌ அந்த காவலா ளிக்கு மிகப்பெறுமதியான வெகுமதி அளித்தார். பின்னர் தனது நிர்வாகியை அழைத்து தனது உயி ரைக்காப்பாற்றிய அந்த காவலாளியின் கணக்கைப் பார்த்து இனிமேல் இங்கு அவனுக்கு காவல்வேலை இல்லை என்று சொல்லி அவனை வீட்டுக்கு அனுப் பிவைக்கும் படி உத் தரவு அளிக்க ஆணையிட்டார். நிர்வாகி ஒன்றும் புரியாமல்முதலாளியிடம், அந்த காவலாளி உங்கள் உயிரைக்காப்பாறிய வன் என்று மெதுவாக சொன்னார். அதற்கு அந்த முதலாளி, காவலாளி என் உயிரைக்காப்பாற்றியது உண்மை தான் ஆனால் அவன் தன் கடமையை மறந்து தூங்கி யது குற்றம் என்று கண்டிப்பாச் சொன்னார். கட மையை செய், பலனை எதிர்பாராதே! பகவற்கீதை
இந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...