பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0082 நமது செபம்

நமது செபம்

 நமது செபம் நமக்காக நமது நலனு க்காக இருக்க க்கூடாது. அப்படிப்ப ட்ட செபம் நிறைவேறாது. எப்படி ப்பட்ட செபம் நிறைவேறும் என்ப தை விளக்க இதோ ஒரு கதை விரிகி ன்றது- ஒரு ஊரிலே இரு நண்பர் கள் இருந்தார்கள். ஒருவன் தெய்வபக்தி மிகுந்தவன் மற்றவனோ கடவுள் இருப்பதை அவ்வளவாக நம்பு வதில்லை, இந்த இருவரும் ஒரு நாள் கடற் பயணம் மேற்கொண்டு வேறு நாடு சென்றனர். செல்லும்வழி யில், புயல் காற்றில் கப்பல் சிக்கி சுக்கு நூறாக உடைந்தது. நண்பர்கள் இருவரும் ஒரு தனியான தீவில் கரை ஒதுங்கினார் கள். அத்தீவில் யாருமே இல்லை. சாப்பிட எதுவேமே இல்லை. தெய்வபக்தி உள்ளவன் சாப்பாட்டிற்காக இறைவனை மன்றாடி னான். பழமும் காட்டுதேனுமாக எல்லாமே கிடைத் தது. இப்படி அந்த நண்பன் செபிக்க செபிக்க எல் லாமே நிறைவேறிய வண்ணம் இருந்தது. மற்ற நண் பனோ செபிப்பது இல்லை சந்தோசமாக தன் நண்ப னோடு எல்லாவற்றையும் அனுபவித்தான்.                                                                          இப்போது கடவுள் பற்றுக் கொண்ட நண்பனுக்கு எரிச்சலாக இருந்தது. கட வுளே இது என்ன நியாயம்? உன்னிடம் அதிகமாக செபிபப்பவனுக்கும் கொடுக்கின் றாய், உன்னை செபிக்காதாவ னுக்கும் கொடுக்கின்றாய் என்று மன சுக்குள் சிந்தித்தான். அவன் சிந்தனையை கண்ட இறைவன், அவனோடு பேசினார். 
                                           அன்பனே! உன்னுடைய நீண்ட செபங்களுக்காக நீ கேட்டதை எல்லாம் தரவில்லை. எல்லாம் உன் நண்பன் உன் மீது வைத்த அன்பி னால் இதனை உனக்கு செய்தேன். நீ நீண்ட நேரம் உன் தேவை களுகாக மன்றாடினாய், மாறக உன் நண்பனோ, தன் பசியை பொருட்படுத்தாமல், தன் நண்பன் பசியாக இருக்கின்றானே என்று எண்ணி கவைலப்பட்டான். அவன் கவலை என் கண் ணுக்கு தெரிந்தது. அதனால் உனக்கு எல்லாம் தருகின்றேன் என்றார் இறைவன். ஆம் அன்பர்களே! நீண்ட செபங் கள், மன்றா ட்டுக்கள் தேவை இல்லை, அயலவரின் கவலைகளை நம் கவ லையாக ஏற்றுக்கொண் டாலே போதும் எல்லாம் நிறைவேறும். சிலவேளை களில் நம்மால் உதவி செய்ய முடியாத கைய று நிலை, கஸ்டம் வரலாம் உண்மைதான். ஆனால் நம் சகோத ரங்கள் துன்பத்தில் வீழ்வது கண்டு சிந்தை இரங்கினாலே போதும், இறைவனின் இரக்கமாக அது உருப்பெரும். சொந்த சகோதரம் துண்பத்தில் வீழ்தல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...