ஒரேயொரு பசுமாடு
நமக்கு எது நல்லது என்று தோன் றுகின்றதோ அதைச்செய்ய வேண்டும், அடுத்தவன் இருக்கின் றான் அவன் செய்யட்டும் என்று தட்டிக்கழித்தால் புண்ணியம் இல்லாமல் விண்ண கம் செல்ல நினை க்கும் வீணர்கள் ஆகிவிடுவோம் இதை விளக்க என் உள்ளத்தில் விரிந்த அழகான கதை இது, பாதி நிஜம் பாதி உருவகம். ஒரு ஊரிலே வயதான ஒரு தாய் இருந்தாள் அவள் தான் இறக்கும் நேரத்தில் தனது மகன்களை அழைத்து, பிள்ளைகளே, உங்களையெ ல்லாம் படிக்க வைத்துள்ளேன், சொத்து என்று சொல்வத ற்கு ஒரேயொரு பசுமாடு மட்டுமே என்னி டம் உள்ளது.. ஒருநாளைக்கு ஒரு வராக நீங்கள் அதன் பாலைக் கறந்து, அதை விற்று உங்கள் ஒரே ஒரு அக்காவையும் கவனித்து, உங்கள் வாழ்வை யும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். அதோடு அவரது உயிரும் பிரிந்தது. மகன்க ளும், தாயின் சொல்படி பசுவின் பாலைக் கறந்து கொள்வதற்கு தங்களுக்கிடையே ஒப்புக்கொண்டனர். முதல் நாள் மூத்த மகன் பால் கறந்தார். ஆனால் பசுவுக்கு இரை போடவில்லை. நமக்கு ஏன் வீண் செலவு, நாளைக்கு பால் கறக்கும் தம்பி பசுவுக்குத் தீனி போடட்டும் என்று விட்டுவிட்டார். அடுத்தநாள் இரண்டாவது மகன் பால் கறந்தார். அவரும் பசுவுக்கு உணவளிக் கவில்லை. அவரும் தனது அண்ணன் போலவே நினைத்தார். இப்படி அத்தனை மகன்களும் பசுவிட மிருந்து பாலை மட்டும் கறந்தார்களேதவிர, அதற்கு ஒருவராகிலும் இரை போடவில்லை. நாள்கள் கடந் தன. பசு இளைத்து க்கொண்டே போனது. மகன்க ளும் அதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. ஒரு நாள் பசுமாடு இறந்துபோனது. பாலுக்கும் பாசத்துக் கும் ஏங்கிய அக்காவும் இறந்தாள். அப்பொழுதுதான் அந்த மகன்களுக்கும் தங்களின் தவறு புரியவந்தது. தன்னலத்தால், இருந்ததையும் இழந்துவிட்டோமே என்று தங்களையே நொந்து கொண்டார்கள். ஆம். தன்னல வாழ்வில் பாசம்,உறவு, நட்பு, மகிழ்வு, சொத்து சுகம் என அனைத்தையும் ஏதாவது ஒரு நாளில் இழக்க நேரிடும். ”நமது வாழ்வின் முத ன்மை நோக்கம் பிறருக்கு உதவுவது.நளிந்து போன சகோதரங்களுக்கு உதவுவது, (தலாய்லாமா)”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக