இறைவன் என்பவன் யார்?
இறைவன் எப்படி இருப்பார்? அவரை எப்படி அழை ப்பது? யாருடைய இறைவன் பெரியவன்? என்ற வாதங்கள் போராட்டங்கள். மனித வாழ் நாள் முழு வதும் தொடர்கின்றன. மனிதர்களுக்கிடையே இன் னும் சமரசம் இறைவனைப்பற்றி உருவாகவில்லை. ஒருவன் சிவன் என்கின்றான் இன்னொருவன் கிருஸ்ணன் என்கின்றான் மற்றவன் அல்லஹா என்கின்றான் அது இல்லை யெகோவா என்கின்றான் .ஆறறிவு படைத்தவனே ஆண்டவனுக்காக சமர் புரிந்து அமரர் ஆகின்ற அறியாமையை என்ன சொல்வது? இறைவன் என்று எதுவும் இல்லை! நீயும் நானும் அன்பால் அறிந்தால் ஆண்டவனாகின்றோம். அறிஞர் முல்லா மீது பொறாமை கொண்ட ஒரு சிலர், முல்லா இறைவனைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களை சொல்லி மக்களை குழப்புகின்றார் என்று மன் னனிடம் முறையிட்டார்கள். மன்னன் முல்லாவை அழைத்தான். முல்லாவின் மீதான வழக்கை பார்க்க மக்கள் அரன்மனையில் கூடிவிட்டார்கள். மன்னன் முல்லாவை விசாரித்தான். முல்லா சொன்னார் மன்னவரே இந்த மக்கள் கூட்டத்தில் நல்ல அறிவு கொண்ட பத்து ஆட்களை தெரிவு செய்து தாருங்கள் என்று கேட்டார் மன்னவனும் அப்படியே செய்தார். முல்லா அந்த பத்து பேருக் கும் ஒரு துண்டை கொடுத்து, இறைவன் எப்படிபட்டவர் என்று எழுதச்சொன் னார். ஒவ்வொருவரும் கடவுள் பிரபஞ்சமாய் இருப்பார். கடவுள் உருவமற்றவ ராய் இருப்பார். கடவுள் இயற்கையாக இருக்கின்றார் இப்படி பலவிதமாக கருத் துக்களை சொன்னார்கள். முல்லா இதனைப்பார்த்து மன்னரிடம் சொன்னார். மன்னரே கடவுள் யார் என்பதில் ஒத்த கருத்து இல்லாத இவர்கள். நான் மட்டும் இறைவனுக்கு எதிராக இருக்கின்றேன் என்ற கருத்தில் மட்டும் எப்படி ஒற்று மையாக செயல்படுகின்றார்கள் ? இது சதி என்று தெரியவில்லையா? என்று கேட்டார். மன்னர் தலையாட்டி ஆமோதித்தார். இறைவனைப்பற்றி மாறுபா டாய் பேசுகின்றவர்கள். மதத்தின் பேரால், இறைவனின் பெயரால் மானுடத் தை மறுப்பவர்கள் யாவருமே பயங்கரவாதிகள்! அது குருவாக இருக்கட்டும், பிக்குவாக இருக்கட்டும், மெளாவியாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் பரவாயில்லை.
பேசாலைதாஸின் எண்ணத்தில் இருந்து,,,,,,,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக