பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0047 விதியை மாற்றி அமை!!!

விதியை மாற்றி அமை!!!

ஒரு முறை ஜப்பானிய ராஜா எதி ரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந் த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந் தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.     அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனை யை சொன்னார். அதேப் போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீர ர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல் லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்க ளிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல் லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனை வரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறு வோம் என்று நம்பிக்கையுடனும் சந் தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற் றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதி யை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத் தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித் தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றியும் அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...