பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0048 கோபத்தை அடக்குவது எப்படி?

கோபத்தை அடக்குவது எப்படி?


மாணவன் ஒருமுறை குருவிடம் வந்து "குருவே, எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?" என்று கேட்டான். அப்படியெனில் "ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு" என்று சொன்னார். அதற்கு மாணவன் "அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது" என்றான். "வேறு எப்பொழுது காட்ட முடியும்?" என்று குருவும் கேட்டார். அதற்கு அவன் "அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது" என்றான். அப்போது குரு "அப்படி யென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமான தாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய். நீ பிறக்கும் போது அதை கொண்டு வரவில்லை, உன் பெற்றோரும் உனக்கு அதை கொடுக்கவில்லை. அப்படியிருக்க உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்து ள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும்" என்று சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீரமங்கையர் வெல்வர்

  வீரமங்கையர் வெல்வர்   பேசாலைதாஸ் ‘ ‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டா...