பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

0556 ஆன்மா என்ற ஆட்டுக்குட்டி

ஆன்மா என்ற ஆட்டுக்குட்டி  பேசாலைதாஸ் 


அன்பர்களே நாம் ஆனந்தத்தை தேடி அலைகின்றோம், அதுபோலவே நம் ஆன்மாவும் ஆனந்தத்தை தேடி அலைகின்றது, ஒருவித்தியாசம், நாம் ஆனந்தம் என்று சொல்லி உலகத்தில் தேடுகின்றோம், ஆனால் ஆன்மாவோ தான் எங்கிருந்து வந்ததோ அந்த பரமொபொருள் இன்பம் தேடி அலைகின்றது, ஏனெனில் நமக்குள் இருக்கும் ஆன்மா பரம இன்பத்தில் இருந்து வந்ததது, அது அங்கு செல்ல ஆசிக்கின்றது, அதனை நாம் தடுப்பதே பாவம் என்ற சம்பவம் அதன் விளைவு நித்திய மரணம்! நமக்குள் இருக்கும் ஆன்மாவை நாம் கண்டு கொள்வதில்லை உணரவும் இல்லை. எம்மாவூஸ் வழிப்பயணத்தில் தம்மோடு ஆன்மா நிலையில் பயணித்த இயேசுவை அவரின் சீடர்கள் கண்டு கொள்ள வில்லை, அதுபோலத்தான் இந்த கதையில் வரும் சம்பவமும்<

ஒரு ஊரில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் தனது எஜமானி டமிருந்து 10 ஆடுகளை வாங்கி வைத்திருந்தான்.தினமும் காலையில் அந்த 10 ஆடுகளை காட்டுக்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு  மாலையில் வீடு திரும்புவான். அவன் எஜமான் தினமும் அதற்கான கூலியை அச் சிறுவனுக்கு கொடுத்து விடுவார். தினமும் அந்த ஆடுகளை ஊருக்கு பக்கத்திலுள்ள காட்டுக்கு மேய்க்க அழைத்து வருவான். அவன் அந்தக் காட்டிலே ஆடுகளை மேய விட்டுவிட்டு , அந்த காட்டுக்கு நடுவிலே இருந்த துறவிகள் வசிக்கும் ஒரு ஆசிரமத்தில் திண்ணையில் அமர்ந்து கொள்வான். அந்த ஆசிரமத்தில் நிறைய துறவிகள் இருந்தனர். அதில் ஒரு துறவி அந்த ஆடு மேய்க்கும் சிறுவனிடம் அடிக்கடி அன்புடன்  பேசிக் கொண்டிருப்பார் . இப்படி தினமும் அவன் அங்கு ஆடு மேய்த்து விட்டு மாலையில் அந்த பத்து ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி சென்று விடுவான். இப்படி தினமும் இது நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவன் வழக்கம் போல , அந்த பத்து ஆடுகளை காலையில் காட்டுக்குள் மேய விட்டு விட்டான் . மதிய நேரம் அவன் அந்த ஆசிரமத்தின் முகப்பில் அமர்ந்து தான் எடுத்து வந்த உணவை சாப்பிட்டான் . சாயங்காலம் வீட்டுக்குப் போகும் பொழுது அவன் ஆடுகளை வழக்கம்போல் எண்ணிப் பார்த்தான் . அப்படி எண்ணிப் பார்த்ததில் 9 ஆடுகள் தான் இருந்தன. ஒரு ஆட்டைக் காணவில்லை .அவன்  பதறிப் போய், மிகவும் பயந்து விட்டான் . தன் எஜமானரிடம் என்ன சொல்லுவது என்று அவன் கவலை அடைந்தான். அந்த ஒரு ஆட்டுக்குட்டியை காணாததால் அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான். அந்த காட்டு வழியே வருவோர் போவோர் எல்லாம் அவன் அழுவதைப் பார்த்து அவனிடம் என்ன என்று விசாரித்தனர். அவர்களிடம் அவன் எனது ஒரு ஆட்டுக்குட்டியை காணவில்லை என்று அழுதுகொண்டே சொன்னான். அதைக் கேட்ட அவர்கள் "ஐயோ பாவம்", என்று சொல்லி விட்டு , சென்று விடுவர். இப்படியே பல பேர் வந்து அவனிடம் விசாரித்து "ஐயோ பாவம்", என்று சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்தனர்.  நேரம் ஆக ஆக கண்களில் நீர் பெருக அழ ஆரம்பித்தான். அப்படி அவன் அழுது கொண்டே அந்த ஒன்பது  ஆடுகளை ஓட்டிக்கொண்டு  வீட்டுக்குப் புறப்பட்டான்.  ஆசிரமத்தின் வழியேதான் அவன் செல்ல வேண்டும் . அங்கு அவன் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் அந்தத் துறவி , அவன் அழுவதைப் பார்த்து "தம்பி ஏன் அழுது கொண்டிருக்கிறாய் ?" என்று இரக்கத்தோடு கேட்டார் . அதற்கு அவன், "எனது ஒரு ஆட்டை காணவில்லை சுவாமி! எனது எஜமானுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை . அவர் என்னைப் பிரம்பால் அடித்தே கொன்றுவிடுவார். எனக்கு ஒன்றும் புரியவில்லை சாமி", என்று தேம்பி தேம்பி அழுதான் . அந்த துறவி அவனையே உற்றுப் பார்த்தார் . "தம்பி மொத்தம் எத்தனை ஆடு இருக்கிறது?" என்று கேட்டார். "சுவாமி 10 ஆண்டுகளில் 9 தான் இருக்கிறது . ஒரு ஆட்டை காணவில்லை சுவாமி", என்றான் . அந்த துறவி அவனை அழைத்து , "தம்பி உனது தோளை பார் !!" என்றார். அவன் தனது தோளைப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது,  அந்த பத்து ஆடுகளில்,  ஒரு குட்டி ஆடு ஒன்று இருந்தது . அதை ஆசையாய் அவன் வளர்ப்பான் . அன்று அவனை அறியாமலேயே அந்த சிறிய ஆட்டுக்குட்டியை ஆசையாய் தனது தோளின்மேல் வைத்துக் கொண்டிருந்தான். அப்படியே பொழுதும் போய்விட்டது . தன் தோள் மேல் இருந்த ஆட்டுக்குட்டியை அவன் மறந்துவிட்டான். அதனால் அவனுக்கு ஒன்பது ஆடுகள்தான் தெரிந்தன . தன் தோள் மீது இருந்த ஆட்டுக்குட்டியை அவன் மறந்தே போய் விட்டான். அந்த துறவி சொன்ன பிறகுதான் அவனுக்கு தன் தோள் மேல் இருந்த தன்னுடைய அந்த ஆசையான ஆட்டுக்குட்டி கண்ணுக்கு தெரிந்தது. இப்பொழுது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ! அவன் மிகவும் சந்தோஷமாய் ஆடினான் ! பாடினான் !! ஆனந்தக் கூத்தாடினான்! ஆடிக்கொண்டே சந்தோஷமாய் வீட்டுக்கு அவன் சென்று விட்டான். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...