பின் தொடர்பவர்கள்

திங்கள், 19 அக்டோபர், 2020

0015 ஊர் கூடி தேர் இழுத்தார்கள்! (சிறுகதை) பேசாலைதாஸ்

 ஊர் கூடி தேர் இழுத்தார்கள்!  பேசாலைதாஸ்

கமலம் வீட்டு, நல்ல சிகப்பு, நெட்டு வன் சேவல் ஒன்று தன் இரண்டு சிறகுகளை யும், பட படவென, தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கொக் கரக்கோ என்று கூவியது! ஏனோ தான் கூவித்தான் காலை பொழுது விடிந்தது போல, ஒரு இறுமாப்பு அந்த சேவலுக்கு. இதற்கு ஆமாம் சொல்வது போல, காகம் ஒன்று கமலம் வீட்டு வேலி, மட்டையில் உட் கார்ந்து கொண்டு கரைந்து தள் ளியது.  "ச்சீ சனியன் காலங்காத்தால, எமனை கூப்பிடுவது போல, கரை ந்து கொட்டுது" என்று சொல்லிக்கொண்டு, அந்த காகத்தை விரட்டுகி ன்றாள் கமலம்.


                                                           அந்த நேரம்பார்த்து, லொக்கு லொக்கு என்று இறுமிக் கொண்டு தன் மகனை அழைத்தார் மதுரநாயகம். " இந்த கிழட்டு கட்டைக்கு, அவரை கூப்பிடாவிட்டால், பொழுது விடியாது போல, இந்த கொரானா காலத் தில, மற்றவங்களுக்கு வர்ற மாதிரி, இந்த கிழட்டுக்கு வருகிதில்லையே" என்று கத்திக்கொண்டு, " அவர் சந்தைக்கு போயிட் டார், திரும்பிவர சாயங்காலம் ஆகும்" என்று மதுரநாயத்தின் மூத்த மருமகள் கமலம் எரிச்சல் பட்டுச்சொல்கின்றாள்.


                                                        மதுரநாயகம் எப்பேர்ப்பட்ட மனுசன்! ஊரையே கட்டியாண்ட கட்டளைகாரன், சம்மாட்டியார். நாடகத்தில ராசா வேசம் போட்டால், அவரை மிஞ்ச ஆளே கிடையாது. காசு பணத்தோட எப்படியோ வாழ்ந்த மனுசன். இப்ப அவர், வயதுபோய், கண்பார்வை குன்றி தன் அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் காலம். தன் வாயோதிப காலத்து உடல் தொந்தரவுகளைவிட, உயிருக்கு உயிராக, பாசத்தோடு பழகிய உறவுகளின் சுடு சொற்களால் தினம் தினம் செத் துக்கொண்டிருந்தார், மதுர நாயகம்!


                      அன்று காலைவேளை பேசாலை வெற்றிமாதா ஆலையத்தின், பெரிய மணி, சின்ன மணி இரண்டும் இரண்டும் போட்டி போட்டு ஓங்கி ஒலித்தது, ஆலையத்தில் திருவிழா அல்லது விசேட வழிபாடுகள் என்றால், இப்படித்தான் இரண்டு மணிகளும் ஒன்றாக ஒலிக்கும், இன்று வெற்றி மாதா கோவில் திருநாள், அதுதான் அந்த ஆர்ப்பாட்ட ஆலைய அழைப்பு மணி, திருநாள் பூசைகள் எல்லாம் இனிதே னிறைவு பெற்றன, சாயங் காலம் மாதா தேர்ப்பவணி, அதை எப்படி செய்யலாம் என பங்கு சபையும், பொது மக்கள் சிலரும், கூடி கலந்தாலோசிக்கும் வேளை, காற்றிலே சின்ன மணி விட்டு விட்டு ஒலித்தது, அப்படி ஒலித்தது என்றால் யாரோ ஒருவர் ஊருக்குள் இறந்துவிட்டார் என்று,அர்த்தம், அதுதான் மதுரநாயகம் இறந்துவிட்டார்.


                                                              "மனுசன் மாதாவின் நாளிலே மரணித்துவிட் டாரே பாவி மனுசன்", பங்கு சபையில் இருந்த சிலர், முன்முணுத்துக் கொண்டார்கள். இன்று மாதா தேர் ஊர் ஒன்று கூடி இழுத்தபின்னர் நாளை அடக்கம் பற்றி யோசிப்போம், இது பங்குச்சபயிம் ஏக முடிவானது, அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே  சபை களைந்து சென்றார்கள்..!


                                                       மெல்ல எட்டிப் பார்க்கின்றேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..! இருபது வருடங்கள் முன்னாடி – அவர் மனைவி இறந்த பிறகு – சாப்பிட்டாயா..? என்று யாரும் கேட்காத நேரத்தில் – அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

                                               தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை..! காசு இங்கே மரத்திலேயா காய்க்குது - என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது..!அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை...!என்னங்க...! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடு ங்க...! என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!உனக்கென்னப்பா..! பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ் த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது, அவர் இறந்திருந்தார்..! அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

                                                  இப்போதுதான் இறந்தாராம் என்கிறார்கள்..! எப்படி நான் நம்புவது..? நீங்கள் செல்லும் வழியில் இப்படி யாராவது இறந்து கொண்டி ருப்பார்கள்... ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..! இல்லை யேல்...! உங் கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்; புரிந்து கொள்ளுங் கள். வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல...; வாழ வைப்பதும்தான்..! பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகிறது. என் எண்ண ங்களில் அலைமோதுகி ன்றன, பட்டாசு வெடிச்சத்தங்களுடன் மாதாவின் தேரை ஊர் கூடி, இழுக்கத்தொட ங்குகின்றார்கள், மனதிலே எந்த குற்றவுணர்க ளும் அற்றவர்கள் போல,,,,,,,( முகநூல் பதிவென்றின், எச்சங்களில் என் கற்பனைகள்)  பேசாலைதாஸ்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...