பின் தொடர்பவர்கள்

வியாழன், 2 ஜனவரி, 2020

0281 கடவுளை தொடு!

கடவுளை தொட்டுப்பாருங்கள்    பேசாலைதாஸ் 

பெரும்பாடுள்ள ஸ்திரி இயேசு வின் ஆடை ஓர bத்தை தொட டாள் உடனே சுகம்பெற்றாள் , அந்தக்கணமே இயேசு தன்னிடம் இருந்து வல் லமை புறப்பட்டு ச்சென்றதை உணர்ந்தார், இந்த நிகழ்வை நான் நினைக்கும்போதெல்லாம் ஒரு கதை நினைவு க்கு வந்துபோவதுண்டு 

                               ஒருசமயம் பாக்தாத்தின்  அரசன் சுல்தான், ஒரு சிறந்த ஏற்பாடு செய்தான் . அதா வது தன்னிடம் உள்ள கலைப்பொருள்களையும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த உடைகள் போன்றவற்றை ஒரு கண்காட்சி போல நடத் தினான் .மக்கள் திரண்டு ரசித்தார்கள் . 

                                          அப்பொழுது அந்த சுல்தான் திடீரென்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை செய்தான் .அதாவது யார் யார் தான் விரும்பிய பொருள்களைத் தொடுகிறார்களோ , அது அவர் களுக்குச் சொந்தமாகும் என்பதுதான் ! மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு தங்களுக்கு வேண் டிய பொருள்களைத் தொட்டு எடுத்துக் கொண் டார்கள் .

                                     அப்பொழுது அரச சிம்மாசனத்  துக்கு  பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அடி மைப்பெண் சிறிது சிந்தித்தவாறு நின்றிருந் தாள் .அப்பொழுது அந்த சுல்தான் தன் அரச சிம்மாசனத்தில்  வந்து உட்கார்ந்தான் .உடனே அந்த அடிமைப்பெண் அந்த சுல்தானைத் தொட் டுவிட்டாள் !

                                        அந்தப் பெண்ணின் அறிவுக்  கூர்மையைக் கண்டு வியந்த அந்த அரசன் ,          " நீ இந்த நாட்டுக்கு அரசனான என்னையே தொட்டுவிட்டாய் . இனிமேல் இந்த நாடே உனக் குச் சொந்தம் ! என்றான் .

                                  இந்த கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்கின்கிறிர்கள்? நான் தெளி ந்து கொண்டது இதுதான், வாழ்வு என்பது மிகப் பெரியது அதன் வெளிச்சுற்று மிக ஆடம்பர மானது . நீங்கள்  இந்த வெளிச்சுற்றில் உள்ள ஒவ்வொரு ஆடம்பரப் பொருள்களையும் தொட்டு அடையப்போகிறீர்களா? அல்லது அந்த வாழ்வுக்கு ஆதாரமான அதன் மையத்தில் இயங் கும் கடவுளைத் தொட விரும்புகிறீர்களா ? என் னைப் பொறுத்தவரையில் , வாழ்வேதான் கடவுள் .

                                பெரும்பாலோர் வாழ்வு என்றால் வியாபாரம் , பணம் , அதிகாரம் , கௌரவம் , அரசியல் , குடும்பம் , பெண் இன்பம் என்றுதான் நினைக்கிறார்கள் . இவையெல்லாம் வாழ்வின் மிக மேலோட்டமான அம்சங்கள் . இவைகளெல் லாம் கடவுள் என்ற அரண்மனையின் வாசல்கள் .இவைகள் எல்லாம் சலிப்பை உண்டு பண்ணக் கூடியவை . சிற்றின்பத்தில் சேர்ந்தவை மாறா கப் பேரின்பம் என்பது கடவுளுக்குள்  இருக்கி றது .                                                                                       

                                            அங்கு உண்மையான வாழ்வு இருக்கிறதுநீங்கள் வெறுமனே சாப்பிட்டுக் கொண்டும் , குடித்துக் கொண்டும் , திருமணம் செய்துகொண்டும் , பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும் , இருப்பது மிகவும் மேலோட்டமான வாழ்வு . கடவுளுக்குள்ளாக வாழ்வதே உண்மையான வாழ்வு, அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...