நம்பிக்கையின் ஆதாரம் ஆண்டவன்!
அன்பர்களே நாம் மற்றவர் மீது கொள்ளும் நம்பிக்கையும் நட்பும் உறவுகளும், நமது வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகி ன்றது. நாம் அன்பு செய்யும் நபர், ஒருபோதும் நம்மை கைவிடமாட் டார்கள் என்ற நம்பிக்கை நம்க்கு புதிய தெம்பை நமக்கு ஊட்டலாம். நம்மை ஒருபோதும் கைவிடாதவ ர்கள் நமது தாய், தகப்பன் இவர்க ளையும் கைவிடாமல் காப்பாற்று வது இறைவன் ஒருவனே! அந்த இறைவனையே நம் வாழ்வின் ஆதார மாக கொண்டால் கவலைகள் நமக்கேது? இறைவன் நமக்கு துணைய ண்டு, அவர் காவல் நமக்கு தினம் உண்டு. இறைவன் ஒருவன் துணை இருக்க வீண் கவலை நமக்கு தினம் எதற்கு? இந்த கருத்தை அழகாக சொல்கின்றது, இந்த சம்பவம்!
ஆகாயத்தில் பறந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது .பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது .ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப் போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார் .இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ? குழந்தை சொன்னது ..எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..பெண்பிள்ளையை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் மகளுடைய பாசம் . பாசம் எனபது நம்பிக்கை ...அன்புடன் பேசாலைதாஸ் (இந்த சம்பவம் முக நூலில் யாரோ விபரித்தது!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக