பின் தொடர்பவர்கள்

புதன், 30 மே, 2018

0548 இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம்
( அன்பர்களே  உண்மைச்சம்பவம் ஒன்று கதையாக உங்களுக்கு தருகின்றேன். படத்தில் இருப்பவர்களே சம்பவத்தின் கதாநாயகர்கள்)
                                  மல்லிகா, விவசாய கூலித் தொழிலாளியான தாய்க்கும் தந்தைக்கும் மகளாக பிறந்தவள் அவள் தான் குடும்பத் தில் மூத்த பெண், உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும், கஸ்டப்பட்டு படித்து பிளஸ் டூ தேர்விலே 1017 மதிப்பெண் எடுத்து சாதித்திருந்தாள். அவளின் இலட்சியமான  பி.எஸ்.சி அக்ரிக்கல்ச்சர் பட்டப்படிப்புக் காக காத்திருந்தாள் அவள் எதிர்பார்த்த படியே அந்த படிப்பினை தொடருவதற்கான கலந்தாய்வுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது. மல்லிகாவும் அவளது படிக்காத விவசாய கூலியான அம்மாவும் சென்னைக்குப்புறப்பட்டு காலை ஆறுமணிக்கே அண்ணா பலகலைக்கழக நுழைவாயில் நின்றபடி, அண்ணா வழிகேட்டபடி நின்றனர். 

                                                               காலை ஒன்பது மணிக்கு துவங்க இருக்கும், கலந்தாய்வுக்கு திருசியில் இருந்து வந்திருப்பதாகவும், அண்ணா நகர் அரங்கத்தில் நடப்பதாக எண்ணி அவர்கள் சென்னை வந்துவிட்டனர். வழியில் போய்வந்தவர்கள் அழைப்பிதழை வாங்கி பார்த்தவுடந்தான், கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கின்றது என்று அவர்களுக்கு தெரிய வந்தது. பாவம் விசயம் விளங்க, படிக்காத ஏழை விவசாய கூலித்தாய் என்ன செய்வாள்? செய்வதறியாதாது திகைத்து நின்ற வேளை, அவ்வழி யாழ் வாங்கிங் சென்ற ஒரு பெரியவர், விடயத்தை அறிந்து, அவர்களை உடனடியாக கோயாம்புத்தூருக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கமுன் வந்தார். மற்றவர்கள் கோயம்புத்தூரில் இருக்கும் தமது உறவுகளுக்கு விசயத்தை விளங்கப்படுத்தி அந்த ஏழைத்தாய்க்கும் மல்லிகாவுக்கும் உதவி செய்ய கோரியிருந்தார்கள். கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது..


விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில்தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது. ஆம் மானிடம் காக்கும் நல்ல உள்ளங்கள் இன்றும் இருப்பதினால்தான். இந்த உலகம் இன்னும் உருளுகின்றது மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம் இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...