பின் தொடர்பவர்கள்

திங்கள், 28 மே, 2018

0546 கண்ணுக்கு தெரியாத கயிறு

கண்ணுக்கு தெரியாத கயிறு

அன்பர்களே நமது வாழ்கையில் நாம் முழு சுதந்திரவாளியாக வாழ ஆசைப்படுகின்றோம், ஆனால் நிலமை அப்படி அல்ல, எல்லாவற் றிலும் கட்டுண்டு கிடக்கின்றோம். நான் சொலவ்து அரசியல் மட்டு மல்ல, நமது ஆசைகள் உட்பட அவைகளால் நாம் கட்டிவைக்க ப்பட்டுள்ளோம். பணம், சொத்து, புகழ், பதவி இப்படிப்பட்ட ஆசைக ளால் கட்டிவைக்கப்பட்டுள்ளோம். எதனை நாம் கட்டிவைக்க முயல் கின்றோமோ அதனால் நாம் கட்டிவைக்கப்படுகின்றோம். பணத்தை கட்டி ஆள ஆஸைப்ப்åஅடுகின்றோம், பின்னர் பணம் நம்மை கட்டி ஆளவிட்டுவிடுகின்றோம். இதுதான் யாதர்த்த உண்மை இதனை அழகாக விளக்குகின்றது இந்த கதை!
                                                                                            ஒரு மாட்டிடையன் தன் பசுவின் கழுத்தில் கயிறு கட்டி...மறுமுனையை தன் கையில் பிடித்துக் கொண்டு, பசுவை மேய்த்துக் கொண்டு இருந்தான் ..அவன் எதிரில் ஞானிகளின் கூட்டம் வந்தது... ஒரு  ஞானி தன் சீடர்களிடம்...இடையனையும் பசுவை யும் சூழ்ந்து நிற்க சொன்னார்...ஒரு  சில‌ ஞானி உபதேசிக்கும் முறை  இப்படிதான்...பிறகு அவர் இடையனை பார்த்து...நீ பசுவோடு கட்டப்பட்டி ருக்கிறாயா? பசு உன்னோடு கட்டப்பட்டிருக்கிறதா? என்று கேட்டார், அதற்கு அந்த இடையன்...பசுதான் கட்டப்பட்டு என் கையில் இருக்கிறது நான் எப்படி பசுவோடு கட்டப்பட்டிருப்பேன்?  என்று கேட்டான்...உடனே ஞானி...பசுவின் கழுத்தில் இருந்த  கயிற்றை அவிழ்த்து விட்டார் 

                                                                                          சட்டென பசு ஓட்டம் பிடித்தது... பசுவை பிடிக்க...இடையன் பசுவின் பின்னால்  துரத்தி கொண்டு ஓடி னான்... ஞானி தன் சீடர்களை பார்த்து, பார்த்தீர்களா இடையன்,பசு தன் கையில் கட்டுண்டு...கிடப்பதாக நினைதான் ஆனால்...எதார்த்தத்தில் அவந்தான் பசுவிடம்தான் கட்டுண்டு கிடந்தான்  அதனால் தான் அவன் பசுவின் பின்னால் ஓடுகின்றான்..ஒவ்வொரு மனிதனும்  பற்று  என்ற கண்னுக்கு தெரியாதா கயிற்றினால் நம்மை நாமே கட்டிவைத்துள் ளோம். கட்டுக்களை உதறித்தள்ளுங்கள்.உலகத்தில் எதுவும் நம்மை பற்றுவதில்லை...நாம் தான் பற்றி கொண்டு இருக்கிறோம்...அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...