பின் தொடர்பவர்கள்

புதன், 25 ஏப்ரல், 2018

0524 நாடோடியும் பிச்சைக்காரனும்

நாடோடியும் பிச்சைக்காரனும்
                     


ஒரு நாடோடி, கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார் அவர் பல குருமார்களை சந்தித்தார் ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏமாற் றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக் குச் சென்றார் அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்ட த்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற் கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லா வற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது அந்த சூஃபி அதனுள் சென்றார் அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்ததுஅவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார் வாரத்திற்கு ஒருமுறை அவர்அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.   


                                                                      இந்த நாடோடி தன்னுடைய மந்திரமான அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந் தார் அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையா னவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார் அந்த கூடாரத்தை சுற்றி மிகவும்  ஆழ்ந்த மௌனம் இருந்ததுஅது மிகவும் அமைதியா னதாக இருந்தது அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கி னார் அவரது இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அந்த நாடோடி முக்க்தி அடைய வெகுதூரம் முய ற்ச்சிக்கவேண்டியிருந்தது.  வருடங்கள் கடந்தன அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது தேக்கு மரங்கள் மிகவும் வளம டைந்தன அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு,இலைகள் விட்டு செழிப்படைந்தன

                                                                 அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது ஆனால் அந்த நாடோடியின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது ஆனால்.அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக் கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார்அவர் தியானமும் பிரார்த்தனை யும் செய்து கொண்டேயிருந்தார் பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. 

                                                              ஒரு நாள் நடு இரவில். திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள் என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர் தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை, அப்படியும் அது நடக்கவில்லை என்றால். அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது ஒரு சந் தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக்கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதி ல்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ....??? இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று விடுகின்றதோ.....!?!
இறைவனை போய் சேர வில்லையோ...??? எப்படி சூரிய ஒளி கூடாரத்து க்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ...??? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு ஒட்டுண்ணியோ என நினைத்தார் பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார். அந்த நாடோடி.

                                                                                   ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது.அவன் அந்த அவாவை அலட்சியம் செய்தான் காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும், இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை எதற்காக காட்டிற்குள் போக வேண்டும்...???அது ஆபத்தானது, காட்டிற்க் குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என நினைத் தான்ஆனால்ஏதோ ஒன்று அவனை இழுத்தது அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 

                                                      அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்குள் ஓடலானான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினை த்தான் ஆனால் அவனது உடல் அவனது கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது அவன் தப்பியோட நினைத்தான் காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் ஆனால் பயனில்லைஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது அந்த மரக்கூடாரத்திலிருந்து மெல்லிய குரல் வந்தது என்னிடம் வா அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது அவனுக்கு கேட்டது அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது அந்த முழு கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில் மின்னியது அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும், அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில் யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞான ஒளியும்,  முக்தி நிலையின் அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான் அவன் அந்த மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலை மாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அந்த பிச்சைக்காரன் இப்போத்கு ஞானியாகிவிட்டான்.  

                                                                                             ஞானத்தை தேடி அதே தேக்கு மரக்காட்டில் தவம் இருந்த சுபியோ . அந்த காட்டைவிட்டு ஓடி .இன்னமும் கடவுளை தேடி அலைந்து கொண்டே இருந்தார். ஞானம் என்பது யாருக்கு எப்பொது கிடைக்கும் என்று தெரியாது. மீன்பிடித்துக்கொண்டிருந்த சாதாரண மனிதர்கள் இயேசுவின் பொதனையை கேட்டு அந்த கணமே சீடரானார்கள். ஆனால் வருடக்கணக்கில் ஞானத்திற்காக தவம் கிடந்த யூத மத குருக்கள், அறிஞர்கள் ஞானம் பெற தவறி விட்டனர். ஞானம் பெற முதலில், எளிய மனமும், வேறுமையும் இருந்தால் பூரணம் அடைய வாய்ப்பு உண்டு. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...