பின் தொடர்பவர்கள்

சனி, 31 மார்ச், 2018

0516 விதியா மதியா?

 விதியா மதியா?
அன்பர்களே விதியை மதியால் வெல்லமுடியும் என்பார் சிலர், இல்லை வாழ்கை என்பது அவரவர் விதிப்படி அமைகின்றது என்பார் பலர். வாழ்க்கை விதித்த விதிப்படிதான் போகின்றது என்றால் மனிதனுக்கு அறிவுரைகள், ஆலையம் ஏன்? மதங்கள் எதற்காக? என்பது எனது கேள்வி! வாழ்க்கை விதிப்படி நகர்கின்றதா அல்லது நமது சொந்த அறிவில் மதியில் அசைகின்றதா என்பதை என்னால் சரிவரி சொல்ல முடியாது. எனக்கும் அதில் பலத்த சந்தேகம் உண்டு. எனக்குள்ள சந்தேகத்தைப்போலவே அன்று அலி என்ற ஒரு இஸ்லாமிய நண்பருக்கும் ஏற்பட்டது. அவர் நேரடியாக நபிகள் நாயகத்திடம் கேட்டார். நபிகள் அவர்களே! மனித வாழ்க்கை மதிப்படி அமைகின்றதா அல்லது விதிப்படி நகர்கின்றதா? இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள், நான் விடை சொல்வதற்கு முன்னர் ஐந்து நிமிடம் எனக்கு முன்னால் நீ ஒற்றைக்காலில் நிற்க முடியுமா என்று கேட்க, அலியோ சட்டென்று தனது இடது காலை தூக்கி, வலது காலில் நின்றார். பின்னர் ஐந்து நிமிடம் கழிந்த பின்னர், நபிகள் அவனிடம் இப்போது உனது மற்றக்காலையும் தூக்கிக்கொண்டு நில் என்றார். அதற்கு அலி, நபிகள் நாயகமே என்ன உளறுகின்றீர்கள் எப்படி நான் மற்றக்காலையும் தூக்குவது? நான் ஏற்கனவே ஒரு காலில் நிற்கின்றேன். என்னால் மற்றக்காலையும் தூக்கமுடியாது, அது இயலவே இயலாது என்றான். அதற்கு நாயகம் நபிகள் சொன்னார், இப்போது புரிகின்றதா? நான் முதலில் சொன்னபோது நீ உன் சொந்த மதியின் படி  இடது காலை தூக்கி வலது காலில் நின்றாய், இப்போது உன்னால் வலது காலை உன்னால் தூக்கமுடியாது இதுதான் விதி. வாழ்வில் நாம் செயல்படுவதற்க்கு மதிதான் துணைபோகின்றது பின்னர் நாம் செய்த செயலின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டியுள்ளது அதுவே விதியாகின்றது. விதி மதி இது இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கி இருப்பதால் இந்த இரண்டையும் நம்மால் ஒதுக்கிவிடமுடியாது. எனவே நாம் நமது கடமையை செய்வோம் மிகுதி விதியின் வசம்! விதியின் ரதங்களில் ஏறிப்பயணம் செய்தால் அந்த மதியும் கலங்குதடா! சிறு மனமும் மயங்குதடா! உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...