பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

0502 முனிவானாகிய வேடன்!

முனிவானாகிய வேடன்!
அன்பர்களே வேதத்தில் ஒரு வார்த்தை உண்டு. "இதோ சீக்கிரம் வருகின்றேன், அவனவன் செயலுக்கேற்ற சம்பாவனையுடன் வருகி ன்றேன்" இதுவே அந்த வசனம்! நமது கர்ம வினைகளுக்கு ஏற்றபடியே நமக்குரிய சம்பா வனை நடக்கும். வினை விதைத்தவன் வினை, அறுப்பான் என்பதின் சூட்ச்சுமம் இதுதான். வாழ்வில் நாம் நல்ல அறம், தர்மம் செய்தால் அது புண்ணியமாக நமக்கு கிடைக்கும். நமது பிள்ளைகள், மனைவி இவர்களுக்காக‌ மட்டும் வாழும் வாழ்க்கை அது சுயதர்மம். அதனால் நமக்கு எந்தவித நன்மையும் நடக்கப்போவது இல்லை. நமது பிள்ளைகளின் வளமான வாழ்வை பார்த்து இவ்வுலகத்தில் ஆனந்தப்படுவதோடு முடிவடையும், ஆனால் மறு உலக வாழ்வில் நமக்காக எது நம்மோடு கூடவரும்? நாம் செய்யும் தான, தர்ம, புண்ணியங்களை விட எது வரும் சொல்லுங்கள்? இதனை எளிதாக விளக்கும் ஒரு கதை இதோ,,,,,,,,,,,,,,

இராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் அந்த வால்மீகி ஒரு வேடனாகவும் வழிப்பறிக் கள் வனாகவும், வாழ்ந்தவர் என்பது பலர் அறியாவிடயம். வால்மீகி என்ற பெயர் கொண்ட கெளசிகன், ஒரு முறை நாரதரை சந்திக் கும் வாய்ப்பு கிட்டியது, அப்பொழுது கெளசிகனிடம் பாவப்பட்ட தொழிலை ஏன் செய்கின்றாய் என்று கேட்டார். அதற்கு கெளசிகன், தன் மனைவி பிள்ளை கள் இவர்களை காப்பாற்ற இந்த தொழிலைச் செய்கி ன்றேன் என்று சொன்னான். அதற்கு நாரதர் அப்ப டியா? உன் மனைவியிடம் சென்று, நீ செய்யும் இந்த பாவப்பட்ட தொழிலில் பங்கு உண்டா? என்று கேட்டு ப்பார்க்கச் சொன்னார். கெளசிகனும் அவ்வாறே நாரதர் சொல்லியவாறு மனைவியிடம் கேட்டான். அதற்கு அவன் மனைவி, உன் பாவத்தில் எனக்கேது பங்கு? நான் உன்னை நம்பி வந்தவள், என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாறுவது உன் பொறுப்பு, உன் பாவத்தில் நான் பங்கு கொள்வது எப்படி நியா யமாகும்? என்று வாதிட்டார். கெளசிகனான வேட னின் கண்கள் திறந்தன. அவனவன் கர்ம விணை களுக்கு அவனவனே பொறுப்பு வகிக்கின்றான். எனக்காக நீ அழலாம் இயற்கையில் அது சாத்தியம், ஆனால் உன் பசிக்காக நான் உணவருந்துவது எப்படி சாத்தியம்? என்று இறைவன் கேட்பது போல, கெளசிகனுக்கு சுற்றி இருந்த இயற்கை உணர்த்தியது. வேடனாகிய கெளசிகன் மனம் மாறி, இறை ஞானத் தை நாடி செல்கின்றான்,,,,,,,, இறுதியில் இராம பக்த னாய் வால்மீகி என்ற முனிவனாகி இராமயணத்தை இயற்றுகின்றார். ஆம் அன்பர்களே! அவனவன் கர்மவினைகளுக்கு அவனவனே பொறுப்பு வகிக்கின்றான், இதில் சாக்கு போக்கு சொல்ல இடமே இல்லை என அப்போஸ்தலன் பவுல் சொன்னது எனக்கு ஞாபகத்தில் வருகின்றது, அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...